
வேர்ட் புரோகிராம் கொண்டிருக்கும் Drawing Canvas படம் வரைவதற்கான ஒரு தனி அடுக்கினைத் தருகிறது. இதில் அமைக்கப்படும் ஆப்ஜெக்ட்டுகள் ஒரு தனி இடத்தை எடுத்துக் கொள்வதுடன், இவ்வாறு வைக்கப்படும் அனைத்து ஆப்ஜெக்ட்களும் ஒரு குழுவாகவே இயங்கும். வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தும் பலர் இந்த கேன்வாஸ் படிமத்தைப் பயன்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாக இருப்பதாகக் கூறி உள்ளனர்.
பெரும்பாலானவர்களுக்கு இது தேவையே இல்லை. நீங்கள் இன்னும் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், இந்த வேர்ட் கேன்வாஸ் வசதியை முடக்கி விடலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. கிடைக்கும் விண்டோவில், General டேபில் கிளிக் செய்திடவும்.
3. General Options பிரிவில் Automatically Create Drawing Canvas When Inserting AutoShapes என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விடவும்.
4. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 தொகுப்புகளில், வேர்ட் கேன்வாஸ் மாறா நிலையில் முடக்கப்பட்டுள்ளது. இவற்றில் அது முடக்கப்படாமல் இருந்தால், வேர்ட் பயன்படுத்துகையில், ஒருவர் இதனை இயக்கி இருக்க வேண்டும். இதனை மீண்டும் இயங்கா நிலையில் வைத்திட கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Office பட்டன் அழுத்தி, பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இடது பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Editing பிரிவில், Automatically Create Drawing Canvas When Inserting AutoShapes என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து மூடவும்.
0 comments:
Post a Comment