
வேர்ட் தன்னுடைய புதிய டாகுமென்ட்களை Normal. dotx என்ற கட்டமைப்பில் (Template) வைக்கிறது. ஆனால், இந்த டெம்ப்ளேட் கொண்டுள்ள செட்டிங்ஸ் அமைப்பு, நம் தேவைகளுக்கு இணையாக இருக்காது. எனவே இந்த Normal.dotx கட்டமைப்பில் நம் தேவைகளுக்கேற்ப சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். பொதுவாக, பலரும் விரும்பும் மாற்றம் இதில் தரப்பட்டுள்ள எழுத்துரு மற்றும்
அதன் பாய்ன்ட் அல்லது பைகா அளவு. இதில் டெம்ப்ளேட் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. புதிய டாகுமென்ட் ஒன்றைத் திறந்து அதில் Home டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. கீழ்புறம் வலது பக்கத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்து Font groupற்கான டயலாக் பாக்சைப் பெறவும்.
3. இந்த டயலாக் பாக்சில், தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும். நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், Format மெனுவிலிருந்து Font தேர்ந்தெடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்சில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தவும். எடுத்துக்காட்டாக, மாறா நிலையில் உள்ள எழுத்துருவிற்குப் பதிலாக, Arial எழுத்துருவினை நீங்கள் விரும்பலாம். அதன் அளவும் 12 ஆக இருக்க திட்டமிடலாம்.
4. இந்த டயலாக் பாக்சை மூடும் முன், Set As Default என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2003 தொகுப்பில், Default என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கிடைக்கும் உறுதிப்படுத்தலுக்கான டயலாக் பாக்சில், Normal டெம்ப்ளேட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் அனைத்து டாகு மென்ட்களுக்கும் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை அமல்படுத்தத் தேவையான ஆப்ஷ னைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும். சிலர், தங்களுடைய டாகுமென்ட்களில், மார்ஜின் மற்றும் ஸ்டைல் போன்றவற்றைத் தாங்கள் விரும்பும் வகையில் அமைக்க எண்ணுவார்கள். இவர்கள் நார்மல் டெம்ப்ளேட்டில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தாமல், custom template ஒன்றில் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்திப் பயன்படுத்துவது நல்லது.
0 comments:
Post a Comment