வியூ சோனிக் நிறுவனம், அண்மையில், இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய 3ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை, வியூ போன் 3 என்ற பெயரில் ரூ.10,000 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்களில் மட்டுமே இது கிடைக்கும். ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல், 3.5 அங்குல மல்ட்டி டச் ஸ்கிரீன் கொண்டது.
இதன் ரெசல்யூசன் திறன் 320x480 என்ற அளவில் உள்ளது. எனப்படும் விர்ச்சுவல் கீ போர்ட் இதில் தரப்பட்டுள்ளது. இதன் சி.பி.யு. 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதில் புரோடோகால் இயங்குவதால், மிக வேகமாக 7.2 Mbps வேகத்தில் டேட்டாவினை தரவிறக்கம் செய்திட முடியும். 5 எம்.பி. திறனில், ஆட்டோ போகஸ் திறன் கொண்ட கேமராவால், ஸ்டில் படங்களையும், வீடியோ கிளிப்களையும் கையாள இயலும். 512 எம்.பி. ராம் நினைவகம் தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத் 2.1., ஜி.பி.எஸ்., 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜி-சென்ஸார், இ-காம்பஸ், 1500 mAh பேட்டரி ஆகியவை இதன் மற்ற சிறப்புகள். இதன் விலையும் அனைவரும் வாங்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வியூ போன் 3 அழகான கருப்பு லெதர் பேக்கில், தனி அடையாளம் கிடைக்கும் வகையில் தரப்படுகிறது.

0 comments:
Post a Comment