
வேர்ட் நாம் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுகையில், தானாகவே சொற்களில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து, சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில் நெளிவு கோடுகளை இட்டுக் காட்டுகிறது. இதே போல பார்மட்டிங் வகையில் பிரச்னை இருந்தாலும் காட்டுகிறது. சிகப்பு கோடு இருந் தால், வேர்ட் பயன்படுத்தும் சொல்லில் அந்த சொல் இல்லை என பொருள். அதாவது, அந்த சொல் இல்லை; அல்லது நாம்
தவறாக அதனை டைப் செய்திடுகிறோம். பச்சை வண்ணத்தில் கோடு இருந்தால், அது இலக்கணப் பிழையைக் குறிக்கும். பார்மட்டிங் வகையில் பிழை இருந்தால், அது நீல நிறத்தில் கோடிட்டுக் காட்டப்படும்.
இந்த பிழை சுட்டும் வசதி நமக்கு நல்லதுதான். தவறுகள் இன்றி டெக்ஸ்ட் அமைக்க முடியும். ஆங்கிலம் நமக்கு இரண்டாவது மொழி என்பதால், இந்த வசதி கட்டாயம் நமக்குத் தேவை. ஆனால், ஒரு சிலருக்கு இது அவர்கள் கவனத்தைத் திருப்பும் செயலாக அமைகிறது.
மேலும், ஆங்கிலம் அல்லாத மொழியில் டைப் செய்திடுகையில் ஏறத்தாழ ஒவ்வொரு சொல்லையும் எழுத்துப் பிழை இருப்பதாக வேர்ட் புரோகிராம் காட்டும். ஏனென்றால், பிற மொழிச் சொற்களை அதன் கீ அழுத்தங்களுக்கேற்ப ஆங்கிலச் சொற்களாக எடுத்துக் கொண்டு, அதனை தவறானது என்று வேர்ட் காட்டும். இந்த சிகப்பு, பச்சை நீல வண்ணக் கோடுகள் தேவை இல்லை; காட்டப்பட வேண்டாம் என எண்ணினால், கீழ்க்கண்டவாறு செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், கூணிணிடூண் மெனு பெற்று Oணீtடிணிணண் தேர்ந்தெடுக்கவும்.
2. இடது பிரிவில் Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Spelling & Grammar டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. When Correcting Grammar and Spelling In Word என்ற பிரிவில் முதல் மூன்று ஆப்ஷன்ஸ் Check Spelling As You Type, Use Contextual Spelling, மற்றும் Mark Grammar Errors As You Type முன்பு டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். வேர்ட் 2003ல் Contextual Spelling ஆப்ஷன் தரப்படவில்லை.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
டாகுமெண்ட்களில் நீல நிற நெளிவு கோடுகள் ஏற்படாமல் இருக்க, கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்:
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Tools மெனு பெற்று Options தேர்ந்தெடுக்கவும்.
2. இடது புறம் கிடைக்கும் பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல் Edit டேப்பினைத் தேர்வு செய்து கிளிக் செய்க.
3. Editing Options பிரிவில், Keep Track Of Formatting என்பதன் கீழ் Mark Formatting Inconsistencies option என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். வேர்ட் 2003ல், Editing Options பிரிவில், Mark Formatting Inconsistencies என்பதன் கீழ் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில், நன்கு அதனைக் கற்று, பெரிய திறமைசாலியாக இருந்தாலும், அவற்றைக் கையாள்கையில் தவறுகள் ஏற்படுவது உண்டு. எனவே மேலே குறிப்பிட்டுள்ள திருத்தும் வசதியை மாற்றாமல் இருப்பது நல்லது. இருப்பினும், இதனை ஒரு பிரச்னையாகக் கருதினால், மேலே கண்டபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment