குறைந்த விலை கொண்ட மொபைல்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இது போன்ற மொபைல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது ஜினைன் நிறுவனம். ஜி-50 என்ற டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் புதிய மொபைலை உருவாக்கி உள்ளது ஜினைன் நிறுவனம்.
குறைந்த விலை கொண்ட மொபைலாக
இருப்பினும் சில அற்புதமான வசதிகளை கொண்டுள்ளது இந்த ஜி-50 மொபைல். சிறப்பான துல்லியத்தை கொடுக்கும் கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. புளூடூத், ஜிபிஆர்எஸ் போன்ற தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் சிறந்த மெமரி வசதி மட்டும் அல்லாமல், மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் இதன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் சப்போர்ட் செய்யும்.மல்டி லேன்ங்குவேஜ் வசதிக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது. மயூசிக் ப்ளேயர், எப்எம் ரேடியோ போன்ற பொழுது போக்கு அம்சத்தினை இதில் பெறலாம். இந்த ஜி-50 மொபைலை ரூ.899 விலையில் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் பெறலாம்.

0 comments:
Post a Comment