புதிய தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து அசத்திய நோக்கியா-808 ஸ்மார்ட்போன் பற்றிய ஓர் சிறப்பு பார்வையை பார்ப்போம். எல்லா வகையிலும் சிறப்பு தொழில் நுட்பத்தோடு உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் 4.0 அகன்ற திரை வழங்கப்பட்டுள்ளது. இதன் திரை 360 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.
டிஎப்டி அமோல்டு தொடுதிரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த
ஸ்மார்ட்போன் நோக்கியா பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எஸ்-11 பிராசஸர் அதி வேகத்தில் செயல்பட உதவும்.இந்த ஸ்மார்ட்போனில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது இதன் கேமரா வசதி தான். இதில் 41-மெகா பிக்ஸல் கேமராவும் இருப்பதால் புகைப்படத்தை பொருத்தவரையில் துல்லியமோ துல்லியம் என்று தான் சொல்ல வேண்டும்.
1080 பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெறலாம். ஜியோ டேகிங் தொழில் நுட்பத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும். இதில் செகன்டரி விஜிஏ கேமராவும் உள்ளது.
16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியும் உள்ளதால் இனி எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் ஸ்டோர் செய்யலாம். இதன் 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் சப்போர்ட் செய்யும் வகையில் இதில் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1,400 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த பேட்டரியின் மூலம் 2ஜி வசதிக்கு 11 மணி நேரம் டாக் டைமையும், 3ஜி வசதிக்கு 6 மணி நேரம் 50 நிமிடம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் கொடுக்கும். அதே போல் 2ஜி வசதிக்கு 465 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 3ஜி வசதிக்கும் 540 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்
அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.
அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.
இந்த நோக்கியா-808 ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் சிறந்த தொழில் நுட்ப வசதியினை அள்ளி கொடுக்கும்.

0 comments:
Post a Comment