மனிதர்கள் பேசுவதை வேறொரு மொழிக்கு மாற்றம் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்திருக்கிறது.
முதல் முயற்சியாக, ஆங்கிலத்தில் பேசுவதை, குரல் வடிவிலேயே சீன மொழிக்கு மாற்றும் மென்பொருளை மைக்ரோசாப்டின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் ரிக் ரஷீத் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.
ஏறக்குறைய மனித மொழிபெயர்ப்பாளர்கள் போலவே, இந்த மென்பொருள் செயல்படுவதால், வருங்காலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்று கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படும் இந்தக் கண்டுபிடிப்பு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு பெரும் புகழைப் பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 comments:
புதிய தகவல்... விரைவில் வரட்டும்... நன்றி...
Post a Comment