எந்த ஒரு புதிய தயாரிப்பும் சந்தைக்கு புதிதாக வரும் போது அதை ஏராளமானோர் விரும்பி வாங்குவர். ஆனால் அந்த தயாரிப்பு அவர்களுக்கு திருப்தியாக இல்லை என்றால் அல்லது புதிய தயாரிப்பு அவர்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் இந்த புதிய தயாரிப்பை கைவிட்டு மீண்டும் பழைய தயாரிப்பையே பயன்படுத்துவர்.
இது வாடிக்கையாளர்களின் சாதாரண மனநிலை.
ஆனால் எச்பி நிறுவனம் இந்த மனநிலைக்கு மாற்றான ஒரு புதிய திட்டத்துடன் வருகிறது. அதாவது விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் தனது கணினிகள் மற்றும் லேப்டாப்புகளை வாங்குவோர் அந்த கணினிகளில் மீண்டும் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை நிறுவ முடியாத அளவிற்கு செயல்படுத்தி இருக்கிறது.
அதன்படி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் திருப்தி அடையாதவர்கள் மீண்டும் விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு திரும்பி செல்ல நினைத்தால் அது எச்பியின் நோட்புக் மற்றும் கணினிகளில் முடியாது.
ஆனால் வர்த்தக ரீதியில் வரும் எச்பியின் லேப்டாப்புகள் மற்றும் கணினிகளில் இந்த வசதியைப் பெறலாம். ஆனால் மற்ற சாதாரண லேப்டாப் மற்றும் கணினிகளில் மீண்டும் விண்டோஸ் 7க்கு மாற முடியாது.
மேலும் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் அமைந்த எச்பி கணினி மற்றும் லேப்டாப்புகளை வாங்குவோர் அந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தையே அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று எச்பி விரும்புகிறது. மேலும் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் எச்பியின் கணினிகள் மற்றும் லேப்டாப்புகள் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை சப்போர்ட் செய்யாது.
ஒருவேளை விண்டோஸ் 7க்கு மாறவேண்டும் என்று விரும்பி அதற்கா எச்பியிடம் விண்ணப்பித்தாலும், ஏதாவது ஒரு பெரிய பிரச்சினை இருந்தால் மட்டுமே அதற்கான இசைவை எச்பி வழங்கும்.
ஆனால் வர்த்தக ரீதியாலன தனது லேப்டாப் மற்றும் கணினிகளுக்கு இந்த வசதியை எச்பி வழங்குகிறது. டெல் நிறுவனம் தனது கேமிங் மற்றும் வர்த்தக ரீதியிலான கணினி மற்றும லேப்டாப்புகளுக்கு இந்த வசதியை வழங்குகிறது.
இன்னும் எக்ஸ்பியை விட்டே மாறாத வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 8க்கு மாற வேண்டும் என்றால் அதற்கு இன்னும் சில காலம் ஆகும்.

1 comments:
பயனுள்ள தகவலுக்கு நன்றி...
Post a Comment