நமக்குத் தெரிந்த பலரின் முன் நின்று, ஒரு ஸ்லைட் சோவினை, பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் மூலம் அளிக்கும் போது, பிரசன்டேஷன் தொகுப்பின் இயக்கம் நமக்கு எளி தாகவும், பழக இனிமையானதாகவும் அமைந்தால் தான், காட்சியைப் பதற்றமின்றித் தர முடியும். அந்த வகையில் பவர்பாய்ண்ட் தொ
குப்பில் சில ஷார்ட்கட் கீகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1. முதல் ஸ்லைடிலிருந்து பிரசன்டேஷனைத் தொடங்க F5.
2. அடுத்த அனிமேஷனை இயக்க, அல்லது அடுத்த ஸ்லைடுக்குச் செல்ல என்டர்கீ/ஸ்பேஸ் பார் அல்லது மவுஸ்கிளிக்.
3. முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல பேக் ஸ்பேஸ்.
4. குறிப்பிட்ட ஸ்லைடுக்குச் செல்ல அந்த ஸ்லைடின் எண்ணை டைப் செய்து என்டர் அழுத்தவேண்டும்.
5. முதல் ஸ்லைடிற்குச் செல்ல Home பட்டன்.
6. கடைசி ஸ்லைடிற்குச் செல்ல End பட்டன்.
7. கருப்பு திரையைக் கொண்டு வர அல்லது கருப்பு திரை ஒன்றிலிருந்து ஸ்லைட் ஷோவினைத் தொடர B அல்லது முற்றுப் புள்ளி கீ.
8.வெள்ளை திரையைக் கொண்டு வர அல்லது வெள்ளை திரை ஒன்றிலிருந்து ஸ்லைட் ஷோவினைத் தொடர W அல்லது கமா.
9. ஸ்லைட் ஷோவினை முடிக்க Esc அல்லது ஹைபன்.
10. ஸ்லைட் ஒன்றிலிருந்து அன்னோடேஷன் குறிப்புகளை நீக்க E.
11. பாய்ண்ட்டரை ஒரு பேனாவாக மாற்ற (மாற்றி, அது மறைவாக இருப்பின்,) அதனை பாப் அப் மெனு பட்டனில் காட்ட Ctrl + P.
12. பாய்ண்ட்டரை ஒரு அம்புக் குறியாக மாற்ற (மாற்றி, அது மறைவாக இருப்பின்,) அதனை பாப் அப் மெனு பட்டனில் காட்ட Ctrl + A.
13. பாய்ண்ட்டர் மற்றும் பாப் அப் மெனு பட்டனை மறைக்க Ctrl + H.
14. பாய்ண்ட்டர் மற்றும் பாப் அப் மெனு பட்டனை 15 விநாடிகள் கழித்து மறைக்க Ctrl + U.
15. ஷார்ட்கட் மெனுவினைக் காட்ட Shift + F10.
16. ஸ்லைடில் அடுத்த ஹைப்பர்லிங்க்கிற்கு தாவ Tab.
17. ஸ்லைடில் முந்தைய ஹைப்பர்லிங்க்கிற்கு செல்ல Shift + Tab.
18. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைப்பர் லிங்க்கினை இயக்க Enter.

0 comments:
Post a Comment