எக்ஸெல் தொகுப்பில் கண்ட்ரோல் + எக்ஸ் கீகளை அழுத்தினால், டேட்டா உள்ள ரேஞ்ச் அனைத்தும் தேர்வாகும். ஆனால், பலரும் அது போல தேர்வாகவில்லையே எனத் தெரிவிக்கின்றனர். தவறு எக்ஸெல் செயல்பாட்டில் இல்லை. டேட்டாவின் ஊடே வெற்று வரிசை அல்லது நெடு வரிசை வந்தால் அதற்கு முன்பே டேட்டா தேர்வு நின்றுவிடும்.
எடுத்துக்காட்டாக A1:A15 ரேஞ்சிலும் C1:E10 ரேஞ்சிலும் டேட்டா இருப்பதாக வைத்துக் கொள்வோம்.கர்சரை A7 செல்லில் வைத்து விட்டு Ctrl+x கீகளை அழுத்தினால் A1:A15 ரேஞ்சில் உள்ள டேட்டா தேர்வாகும். அடுத்த ரேஞ்சில் உள்ள டேட்டா தேர்வாகாது. காரணம், இடையில் B நெடு-வரிசை உள்ளது. அது போல் D6 செல்லில் வைத்துவிட்டு Ctrl+x கீகளை அழுத்துங்கள். C1:E10 ரேஞ்ச் தேர்வாகும். இடையில் B நெடு-வரிசை உள்ளதால் A1:A15 ரேஞ்ச் தேர்வாகாது.

0 comments:
Post a Comment