குறிப்பிட்ட அளவில் செல்களை அமைத்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தகவல்களை இடுகிறீர்கள். சில வேளைகளில் செல் கொள்ளாத அளவிற்குத் தகவல்கள் அமைக்கப்படுகின்றன. அப்போது செல்
நம் தகவல்களுக்காக நீட்டிக் கொடுக்காது. ##### என்ற அடையாளத்தினைக் காட்டும். அல்லது நாம் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட செல்லின் நீளத்தினை அதிகப்படுத்த வேண்டும்.
இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி உள்ளது. எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைத் தானே தகவல்களுக்கேற்ற வகையில் நீட்டித்துக் கொள்ள செட் செய்திடலாம். எக்ஸெல் தானாகவே செல் நீள, அகலத்தினை பார்மட் செய்து கொள்ளும். இந்த வசதியினை “shrink to fit” என எக்ஸெல் பெயரிட்டுள்ளது. இடப்படும் தகவல்களின் பாண்ட் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்கிறது. ஆனால், மிக நீளமாக இருக்கும் பட்சத்தில், வழக்கம் போல செல் அமைப்பை மாற்றிக் கொள்கிறது. நீங்களாக அந்த செல்லின் அகலத்தைச் சரி செய்திடுகையில், மீண்டும் தகவலுக்கான பாண்ட் அளவை மாற்றிக் கொள்கிறது.
இதற்கு எந்த செல் அல்லது செல்கள் உள்ள வரிசையை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அது செல், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையாக இருக்கலாம். இனி, Format Cells திறக்கப்பட வேண்டும். இதற்கு, ரிப்பன் கிளிக் செய்து, Home டேப் கிளிக் செய்திடவும். இங்குள்ள Font groupனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது கீழாக உள்ள dialog box launcherஐ கிளிக் செய்திடவும்.
அடுத்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு ஹைலைட் செய்யப்பட்ட செல் அல்லது வரிசையில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Format Cells தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தில் பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸில், Alignment tab என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி உங்கள் தகவல்கள் செல்களுக்கேற்ற வகையில் சுருங்கச் செய்வதற்கு ஒரு டூல் தயார் ஆகிவிட்டது.

0 comments:
Post a Comment