
வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் ஒரு சொல்லில் அதன் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்த பின்னர், அடுத்து இருக்கும் சொல்லிலும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், வேர்ட் அந்த சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்கிறது. நமக்குத் தேவையோ இல்லையோ, வேர்ட் சொல் முழுமையுமே தேர்ந்தெடுக்கும். ஏனென்றால், மாறா நிலையில் இது போல அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற,
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Tools மெனு பெற்று Options தேர்ந்தெடுக்கவும்.
2. இடது புறம் கிடைக்கும் பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல் Edit டேப்பினைத் தேர்வு செய்து கிளிக் செய்க.
3. Editing Options பிரிவில், When Selecting, Automatically Select Entire Word என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி சொற்களைத் தேர்வு செய்கையில், நாம் விரும்பும் வகையில் அதனைப் பகுதி பகுதியாகத் தேர்வு செய்திடலாம்.
0 comments:
Post a Comment