
நாம் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுக்கையில், வேர்ட் மினி டூல் பார் ஒன்றைக் காட்டுகிறது. இதில் பல பார்மட்டிங் ஆப்ஷன்ஸ் அடங்கியுள்ளது. இந்த டூல் பார் பளிச் எனக் காட்டப்படாமல், மங்கலாகத் தெரியும். இருப்பினும் பலர் இது எதற்கு வீணான காட்சி என எண்ணி, எஸ்கேப் கீ அழுத்தி மறைய வைப்பார்கள். இதனை நிரந்தரமாகத் தோன்றாமல் இருக்கும்படி செட் செய்திடலாம்.
1. File மெனு கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 தொகுப்பில், Office பட்டனை அழுத்தி பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. தேவைப்பட்டால், இடது பக்கம் உள்ள பிரிவில் (Left pane) General என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் User Interface Options என்ற பிரிவில், Show Mini Toolbar On Selection என்னும் ஆப்ஷனில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இனி, நீங்கள் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், மினி டூல் பார் காட்டப்பட மாட்டாது. மீண்டும் இது வேண்டும் என்றால், மேலே கூறியுள்ளபடி சென்று, இறுதி ஆப்ஷனில், டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.
0 comments:
Post a Comment