
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்கள் இருக்குமிடம் தேடி அறிய, பைண்ட் அண்ட் ரீபிளேஸ் பயன்படுத்துகிறோம். டாகுமெண்ட் ஒன்றில் பல டேபிள்களைப் பயன்படுத்துகையில் அவை இருக்கும் இடங்களைக் கண்டறிய முடியுமா! முடியும். கண்டறிவது மட்டு மல்ல, ஒரு டேபிளிலிருந்து டாகுமெண்ட்டில் இரண்டு டேபிள் தாண்டி உள்ள இன்னொரு டேபிளுக்கும் தாவிச் செல்லலாம். அப்படியா! என்கிறீர்களா. ஆம், அதற்கான வழிகளை இங்கு காண்போம்.
முதல் வழி Go To கட்டளை பயன்படுத்துவது.
1. எப்5 அழுத்துங்கள். இப்போது வேர்ட், பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தினைக் காட்டும். இதில் Go To டேப்பில் கர்சர் இருக்கும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடதுபக்கத்தில் Go To What பட்டியல் இருக்கும். இதில் Table என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த டேபிளுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
4. இதில் Previous என்பதில் கிளிக் செய்தால், அதற்கு முந்தைய டேபிளுக்குச் செல்வீர்கள்.
5. இப்படியே சென்று நீங்கள் விரும்பும் டேபிளுக்குச் செல்லலாம்.
இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. Object Browserஐப் பயன்படுத்தியும் இந்த வகைத் தேடலை மேற்கொள்ளலாம். இந்த ஆப்ஜெக்ட் பிரவுசர் எங்கு உள்ளது?
வலது பக்கம் உள்ள நெட்டு ஸ்குரோல் பாரை முதலில் பார்க்கவும். அதன் கீழாக இரட்டை அம்புக்குறிகள் மேலும் கீழுமாக இருக்கும். இதன் நடுவே ஒரு சிறிய வட்டக் குறியீடு இருக்கும். இந்த இரட்டை அம்புக் குறியுடன் உள்ள அடையாளத்தில் கிளிக் செய்தால், கர்சர் இருக்கும் இடத்தில் மேலாக உள்ள டேபிளைக் காணலாம். கீழாகக் காட்டும் இரட்டை அம்புக் குறியில் கிளிக் செய்தால், கீழாக உள்ள டேபிளுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
இந்த சிறிய வட்ட அடையாளம் தான் Object Browser. இதில் கிளிக் செய்தால், உடன் பல பேலட்கள் அடங்கிய கட்டம் கிடைக்கும். இதனை ஆப்ஜெக்ட் பேலட் என அழைப்பார்கள். இதில் Browse by Table என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து கீழ் நோக்கி அல்லது மேல் நோக்கி இருக்கும் அம்புக் குறிகளைத் தேர்ந்தெடுத்தால், அதற்கேற்றபடி டேபிள்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
1 comments:
Thanks for sharing... very usefull tips..
http://pregnancycalculator-a2z.blogspot.com
Post a Comment