
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்து கிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை சி அழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும்.
டாகுமெண்ட் இணைக்க
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், சில நேரங்களில் ஒரு டாகுமெண்ட் உள்ளாக, இன்னொரு டாகுமெண்ட்டை இணைக்க விரும்புவீர்கள். முழுவதுமாக கட் அண்ட் பேஸ்ட் அல்லது காப்பி அண்ட் பேஸ்ட் செய்யலாம் என்கிறீர்களா? இதில் எங்கேனும் சிறிய தவறு ஏற்பட்டால் டெக்ஸ்ட் குழப்பக் குவியல் ஆகிவிடும்.. பின் எப்படி இணைப்பீர்கள்? இதற்கெனவே வேர்ட் ஒரு வழி தருகிறது. டாகுமெண்ட்டில் INCLUDETEXT என்ற பீல்டை உருவாக்கிவிட்டால் போதும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலாவதாக, டாகுமெண்ட்டை இணைக்க வேண்டிய இடத்தில் field braces உருவாக்கும் அடைப்புக் குறிகளை அமைக்க வும். இதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டாம். ஜஸ்ட், கண்ட்ரோல் + எப்9 (Ctrl+F9) அழுத்தினால் போதும்.
2. இந்த பீல்டு அடைப்புக் குறிகளுக்குள்ளாக INCLUDETEXT என்ற சொல்லை அமைத்து, பின் அதனை அடுத்து ஒரு ஸ்பேஸ் விட்டு, இணைக்க வேண்டிய டாகுமெண்ட் பெயரை அமைக்கவும். எடுத்துக்காட்டாக நீங்கள் myfile.doc என்ற டாகுமெண்ட் பைலை இணைக்க வேண்டும் என்றால், உங்களுடைய மூல டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் அடைப்புக் குறிகளும், உள்ளே அமைக்கப்படும் டெக்ஸ்ட்டும் - { INCLUDETEXT “MyFile.Doc”}– என்றவாறு அமையும். உடன் F9 அழுத்தி பீல்டை அப்டேட் செய்திட்டால், டாகுமெண்ட் இணைக்கப்படும்.
இந்நிலையில் நீங்கள் விரும்பிய டாகுமெண்ட் இணையாமல், ஏதேனும் ஓர் எர்ரர் மெசேஜ் கிடைக்கிறதா? உடனே சரி பாருங்கள். நீங்கள் உங்கள் டாகுமெண்ட் பைலுக்கான பெயரைச் சரியாக, அதன் டைரக்டரி வழிகளுடன் அமைத்திருக் கிறீர்களா என்பதனை செக் செய்திடவும். நீங்கள் அமைக்கும் டாகுமெண்ட்டும், இணைக்கப்படும் டாகுமெண்ட்டும் ஒரே போல்டரில் இருந்தால் பைலுக்கான டைரக்டரி பெயர் அமைக்க வேண்டிய தில்லை. வேறு வேறு போல்டர் அல்லது டைரக்டரிகளில் இருந்தால், அதற்கான பாத் சரியாக அமைக்க வேண்டும். எனவே தவறு இருந்தால், சரி செய்திடவும்.
ஹைபன்
வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கை யிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.
1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.
2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. இதன் பின் நான்பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.
4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.
5.அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.
0 comments:
Post a Comment