
பட்ஜெட் விலை கொண்ட மொபைல்கள் எப்போதுமே வாடிக்கையாளர்களின் சாய்ஸ் தான். அந்த வகையில் புதிய ஹிப்ஹாப் என்ற மொபைலை வெளியிட்டுள்ளது இன்டெக்ஸ் நிறுவனம். இந்த ஹிப்ஹாப் மொபைல் டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும்.
குறைந்த விலை மொபைலாக இருப்பினும், இது 2.4 இஞ்ச் திரை
வசதியை கொடு்க்கும். கண்களை கவரும் வகையில் சிறப்பான புகைப்படங்களை, இதில் உள்ள 1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் வழங்கும்.
இந்த ஹிப்ஹாப் மொபைல் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்ப வசதிக்கும் சூப்பர் சப்போர்ட் கொடுக்கும். இந்த மொபைலை பொருத்த வரை பிரவுசிங் பற்றிய கவலையும் தேவையில்லை.
வேரென்ன ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால் இதன் ஆடியோ, வீடியோ ப்ளேயரை உபயோகிக்கலாம். பொழுதுபோக்கு அம்சத்தினையும் இதில் எளிதாக பெறலாம்.
இந்த மொபைலில் உள்ள தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் வகையில் இதில் சிறந்த பேட்டரியாக ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 2,000 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 450 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.
மொபைல் மார்கெட்டை டிப்டாப்பாக வலம் வரும் இந்த இன்டெக்ஸ் ஹிப்ஹாப் மொபைலை ரூ.2,000 விலையில் பெறலாம்.
0 comments:
Post a Comment