மழை பெய்திடுகையில், குடை இல்லாமல் தெருவில் அகப்பட்டுக் கொண்டால் திண்டாட்டம் தான். அதுவே, வீட்டினுள் அறையில், நொறுக்குத் தீனியுடனோ, பிடித்த பாட்டு கேட்டவாறே, வெளியே பெய்திடும் மழையை ரசிப்பது ஒரு சுகம் தான். மழை பெய்திடும் ஓசை, சிறு துளிகள் நம் வீட்டுக் கண்ணாடி
ஜன்னல் கதவுகளில் பட்டு விழும் தோற்றம் எல்லாம் நமக்கு ஒரு புதிய உலகைக் காட்டும். ஒரு சிலர் இந்த வேளையில் படுக்கையில் படுத்தால், உறங்கியும் விடுவார்கள். ஆனால், நாம் விரும்பும்போதெல்லாம் மழை பெய்திடுமா? பெய்யாது. ஆனால், மழை பெய்திடுகையில் ஏற்படும், மேலே விவரித்த, சூழ்நிலையை உருவாக்க முடியும் என ஒருவர் நிரூபித்துள்ளார். இவர் உருவாக்கிய ஏற்படும் என ஒருவர் நிரூபித்துள்ளார். மழை பெய்திடும் ஓசை மனதிற்கு நிறைவாகக் கேட்கிறது. இந்த தளத்தின் பெயர் Rainy Mood அவ்வப்போது இடி இடித்திடும் ஓசையும் எழுகிறது. திரையில் கண்ணாடி ஜன்னலில் நீர்த் திவலைகள் விழுந்து, சேர்ந்து கீழ் நோக்கிச் செல்வது காட்டப்படுகிறது. அப்போது ஏற்படும் மெல்லிய ஓசையையும் இந்த தளம் விட்டு வைக்கவில்லை.
இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. மிதமான உணர்வினை மீட்டும் பாடல் ஒன்று பின்னணியில் இசைக்கப்படுகிறது. அது என்ன பாடல் என்று திரையில் காட்டப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் இசைக்கப்படுகிறது.
நீங்கள் உறங்கச் செல்லும் முன் இந்த மழை ஓசையையும் பாடலையும் கேட்டவாறே உறங்க வேண்டும் என எண்ணினால், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் இதனை இயக்கிவிட்டு, ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் கழித்து சிஸ்டத்தை நிறுத்த கட்டளை செட் செய்துவிட்டு, தூங்கச் செல்லலாம். தளத்தை இயக்கிவிட்டு விட்டால், தொடர்ந்து இந்த மழை பெய்து கொண்டே தான் இருக்கும்.
இந்த இணைய தளம் என் மனதிற்கு மிகவும் பிடித்ததால், இதனை இங்கு தந்துள்ளேன். உங்களுக்கும் பிடித்தால் ரசித்து பின்னர் எழுதுங்கள்.

0 comments:
Post a Comment