மொபைல் சேவை வழங்கி வரும் நிறுவனங்கள், தங்கள் சேவைத் திட்டங்களின் பல்வேறு வகை யான கட்டண விபரங்களை, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிக்க வேண்டும் என ட்ராய் அமைப்பு ஆணையிட்டுள்ளது. இவை குறைந்தது ஒரு மாநில மொழி மற்றும் ஒரு ஆங்கில மொழி செய்தித் தாளிலாவது மக்கள் அறியும் வகை யில் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டும். பிரீ பெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் கட்டணங்கள், ஒப்பிட்டுப் பார்த்து
எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்கப்பட வேண்டும். இவை வாடிக்கையாளர் சேவை மையங்கள், விற்பனை மையங்கள் மற்றும் சேவை நிறுவனத்தின் இணைய தளப்பக்கங்களிலும் வெளியிடப்பட வேண்டும். கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவையும் உடனே தெரிவிக்கப்பட வேண்டும். ஜனவரி, ஏப்ரல், ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏழாம் நாள் இவை புதியதாக வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு மொபைல் சேவை நிறுவனங்களின் செயல் பாட்டினை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் ட்ராய் அமைப்பு ஆணை யிட்டுள்ளது.

0 comments:
Post a Comment