
விதவிதமான லுமியா ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நோக்கியா நிறுவனம் புதிய லுமியா-1000 கான்செப்ட் ஸ்மார்ட்போனையும் உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அனைவருக்கும் பிடித்தமான கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பு கொண்டதாகவும் இருக்கும்.
4.3 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும் ஸ்மார்ட்போனுடன்
ஜாய்ஸ்டிக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அமோல்டு தொடுதிரை உள்ளதால் தகவல்கள் தெளிவாக வழங்கப்படும் என்று கூறலாம். இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
ப்யூர்வியூ கேமராவில் உள்ள 41 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா வசதி போல் இனி லுமியா ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகமாக உள்ளது என்ற செய்தியினை கேட்டிருப்பீர்கள். இந்த நோக்கியா லுமியா-1000 கான்செப்ட் ஸ்மார்ட்போனில் 41 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இதில் என்எஃப்சி தொழில் நுட்பத்தினையும் பெற கூடிய வசதிகளும் உள்ளது. லுமியா-1000 கான்செப்ட் ஸ்மார்ட்போன் பற்றிய இன்னும் அதிகமான விவரம் கூடிய விரைவில் வெளியாகும்
0 comments:
Post a Comment