
* டி.எப்.டி. (Thin Film Transistor): கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக் களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவை யாக இருக்கும். படங்களில் பல்லாயிரக் கணக்கில் லட்சக்கணக்கான வண்ணக் கலவை காட்டப்படும்.
* ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment