டாகுமெண்ட் இறுதியில் காலி பக்கங்கள்
வேர்டில் சில டாகுமெண்ட்களை பிரிண்ட் எடுக்கையில், இறுதியாக ஒன்று அல்லது இரண்டு காலி பக்கங்கள் அச்சாகி வரு வதனைப் பார்க்கலாம். ஆனால் டாகுமெண்ட்டினைப் பார்க்கையில் திரையில் அது போல எதுவும் இருப்பது தெரியாது. இதற்குக் காரணம் என்ன? எப்படி இதனைச் சரி செய்திடலாம்.
இதற்குக் காரணம் டாகுமெண்ட் இறுதியில் சில காலி பாராக்கள் இருப்பதுதான். இவற்றை நீக்கலாம். கண்ட்ரோல் + என்ட் கீகளை அழுத்துங்கள். நீங்கள் டாகுமெண்ட்டின் கடைசி பக்கத்திற்குச்
செல்வீர்கள். இங்கே காலியாகவுள்ள பக்கம் உங்களுக்குக் காட்டப்படும். இனி பேக் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். கர்சர் திரையில் தெரியும் வரி வரை இது வரட்டும். இந்த வகையில் காலி பக்கங்களை அழிக்கலாம்.
அந்த காலி பக்கங்களை எப்படி காண்பது? என்ற ஆவல் எழுகிறதா? இந்த அச்சாகாத கேரக்டர்களைக் காட்டுமாறு வேர்ட் தொகுப்புக்கு ஆணையிடலாம். ஸ்டாண்டர்ட் டூல் பாரினை, டாகுமெண்ட் மேலாகப் பார்க்கவும். இதில் Show/Hide tool என ஒன்று அதன் ஐகானோடு இருக்கும். இசைக்கான சிம்பல் போல இது தோற்றமளிக்கும். ஸ்டாண்டர்ட் டூல்பாரில் உள்ள ஐகான்கள் அருகே உங்கள் கர்சரை வரிசையாக ஒவ்வொரு ஐகானாகக் கொண்டு செல்லுங்கள். இந்த Show/Hide tool வருகையில் Show/Hide எனக் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், டாகுமெண்ட் முழுவதும் பாரா முடியும் மற்றும் தொடங்கும் இடங்களில் இந்த அடையாளம் தெரியும். தானாக ஸ்பேஸ் விட்ட இடங்களில் புள்ளிகள் கிடைக்கும். காலியான பக்கங்களும் காட்டப்படும். இதுவரை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றில் காணாத அனைத்து விஷயங்களும் தெரியும். இந்த ஐகானை மீண்டும் கிளிக் செய்தால் இந்த அடையாளங் கள் அனைத்தும் மறந்து போகும்.
வேர்டில் பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற
வேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம்.
வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் உள்ளன என்று பார்க்கலாம்.
1. அரபிக் எண்கள் - 1,2,3 ..
2. அரபிக் எண்கள் சிறிய டேஷ் அடையாளத்துடன் -1, -2,-3 ..
3. அப்பர் கேஸ் ரோமன் I, II, III...
4. லோயர் கேஸ் ரோமன் i, ii, iii ...
5. அப்பர் கேஸ் எழுத்துகள் A,B,C, ...
6. லோயர் கேஸ் எழுத்துகள் a, b, c, ...
இனி பார்மட்டினை மாற்றுவது குறித்துக் காணலாம்.
1. உங்கள் டாகுமெண்ட்டில் எந்த பகுதியில் உள்ள பக்க எண்களின் பார்மட்டை மாற்ற வேண்டுமோ அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. வியூ மெனுவிலிருந்து ஹெடர் அண்ட் புட்டர் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும். இதில்
3. பார்மட் பேஜ் நம்பர் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
4. பின் ஓகே கிளிக் செய்திடவும்.
5. பின் ஹெடர் அண்ட் புட்டர் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

0 comments:
Post a Comment