சாம்சங் நிறுவனம் சென்ற டிசம்பர் மாதம், தன் டூயல் சிம் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வரிசை யில் காலக்ஸி ஒய் டூயோஸ் மற்றும் காலக்ஸி ப்ரோ டூயோஸ் என்ற இரு மொபைல் போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. அண்மை யில் இவற்றை இந்தியா விற்குக் கொண்டு வந்துள்ளது. Letsbuy இணைய தளத்தில், இவற்றை முன் கூட்டியே ஆர்டர் செய்திடலாம்.
சாம்சங் காலக்ஸி ஒய் டூயோஸ் மொபைல் போனில் 3.14 அங்குல டச் ஸ்கிரீன் திரை தரப்பட்டுள்ளது. நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட மெட்டல் மேல்பாகம் பளிச்சிடுகிறது. இதன் தடிமன் 11.98 மிமீ. இதன் எடை 109 கிராம்.
ப்ரோ டூயோஸ் 2.6 அங்குல அகலத்தில் திரை கொண்டுள்ளது. முழுமையான குவெர்ட்டி கீ போர்டு தரப்பட் டுள்ளது. 3 எம்பி கேமரா மற்றும் இரண்டாவதாக ஒரு விஜிஏ கேமராவும் கிடைக்கிறது. இவை முதல் போனில் இல்லை. இந்த இரண்டு போனிலும் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் 2.3 சிஸ்டம் உள்ளது.
இந்த இரண்டு மொபைல் போனிலும் மியூசிக் பிளேயர் சவுண்ட் அலைவ் வசதியுடன் கிடைக்கிறது. 3.5 மிமீ ஹெட்செட் போர்ட் உள்ளது. ஸ்டீரியோ எப்.எம் .ரேடியோ இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் தொடுதிரை புரோகிராமான, டச்விஸ் யூசர் இன்டர்பேஸ் இயங்குகிறது. இவற்றின் ராம் மெமரி 384 எம்பி. மாறா நினைவகம் 512 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை நினைவகத்தின் திறனை உயர்த்தலாம். 3G (HSDPA 7.2Mbps) , Bluetooth v 3.0, USB 2.0, WiFi 802.11 b/g/n, aGPS ஆகியவை இணைய மற்றும் நெட்வொர்க் இணைப்பு கிடைக்க உதவுகின்றன. இவற்றில் தரப்பட்டுள்ள பேட்டரி 1,300 mAh திறன் கொண்டவை. காலக்ஸி ஒய் டூயோஸ் ரூ. 10,490க்கும், அடுத்த போன் ரூ.11,090க்கும் முன் கூட்டியே ஆர்டர் செய்து பெறலாம். அநேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் இவை வழங்கப்படும்.

0 comments:
Post a Comment