அலுவலகம் மற்றும் சொந்த விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. திக்கு தெரியாத ஊர்களுக்கு செல்லவும், வழியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் இதர விஷயங்களை கூறும் வழிகாட்டியாகவும் கார் நேவிகேஷன் சிஸ்டம்கள் பெரிதும் பயன்படுகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் கார் நேவிகேஷன் சிஸ்டம் விற்பனையில் டாம்டாம் முன்னிலை வகிக்கிறது. அந்த நிறுவனத்தின் வயா வரிசை நேவிகேஷன் சிஸ்டம்கள் அனைத்து நவீன வசதிகளுடன் கிடைக்கிறது.ட
இந்த நிலையில், டாம்டாம் நிறுவனத்தின் வயா வரிசை நேவிகேஷன் சிஸ்டம்கள் தற்போது ரிலையன்ஸ் ஆட்டோஸோன் ஆக்சஸெரீஸ் கடைகளில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
வயா 100 நேவிகேஷன் சிஸ்டம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ரிலையன்ஸ் ஆட்டோஸோனில் ரூ.13,499 விலையில், அதாவது ரூ.1,500 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
இதேபோன்று, வயா 120 மற்றும் வயா 125 மாடல்கள் ரூ.2,000 தள்ளுபடியுடன் முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் இது குறிப்பிட்ட கால சலுகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment