மின்னணு சாதனங்களில் புதிய புதிய வசதிகள் அறிமுகமாகி கொண்டே தான் இருக்கிறது. சில வசதிகள் பயன்படுத்துவதற்கு ஓர் ஆர்வத்தினை தூண்டும் வகையில் இருக்கின்றன. அந்த வகை தொழில் நுட்ப வசதிகளில் 3டி வசதியையும் சொல்லலாம். அவதார் என்னும் தொடுதிரை வசதி கொண்ட மொபைலை உருவாக்கி இருக்கிறது இன்டெக்ஸ். இந்த மொபைல் டியூவல் சிம் வசதியையும் வழங்கும்.
இதில் 3டி தொழில் நுட்பத்தினை பெற முடியும். அவதார் மொபைல் 2.8 இஞ்ச் திரை வசதியை வழங்கும். 3டி வசதிகென்று இதில் பிரத்தியேகமான கிளாசஸ் ஃப்ரீயாக வழங்குப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மொபைலின் வீடியோவில் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களை பெறலாம். அவதார் மொபைலில் இன்னொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. இதில் க்ரேஸி பேர்ட்ஸ், கால் ஆஃப் அட்லான்டிஸ், பென்ட்டாசீஸ், யம்ஸ்டர்ஸ் போன்ற எக்கச்சக்கமான கேம்களை பயன்படுத்தலாம்.
சோஷியல் நெட்வொர்க்கான ஃபேஸ்புக் போன்ற வசதிகளையும், சர்ச் என்ஜினான கூகுள், யாஹூ போன்ற வசதிகளையும் இதில் எளிதாக பெறலாம். இந்த மொபைல் ஆங்கிலம், ஹிந்தி என்று டியூவல் லேன்குவேஜ் வசதிக்கு சப்போர்ட் செய்யும். இத்தகைய வசதி கொண்ட இந்த இன்டெக்ஸ் அவதார் மொபைலை ரூ.4,000 விலையில் பெறலாம்.
0 comments:
Post a Comment