கூகுள் ப்ளஸ், ஆர்க்குட்டுக்கு பதிலாகவும், ஃபேஸ்புக்குக்கு போட்டியாகவும் கூகுளால் வெளியிடப்பட்ட சமூக வலைத்தளம். இதிலும் நண்பர்களுடன் இணையலாம், கமெண்ட் அடிக்கலாம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும், மிக முக்கியமானதாக கருதப்படுவது 'ஹேங்அவுட்' தான்.
இந்த ஹேங்அவுட் வசதியானது, வீடியோ சாட் வசதியை மிகவும் எளிமயாக்கியுள்ளது. கூகுள் ப்ளஸ்ஸில் இந்த வசதியைத்தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.
எனவே அந்த வசதியையும் ஜிமெயில் மூலமாகவே தருகிறது கூகுள். கூகுள் இந்தியா, இதனை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
சோதனையில் உள்ள இந்த சேவையானது வெகுவிரைவில் அனைவருக்கும் இலவசமாகவே கிடைக்குமெனவும் கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றை பகிர்தல் மிகவும் எளிதானது.
ஒரு நண்பர்கள் குழுவுடன் நேரடியாகவே கலந்துரையாடுவதை போன்ற உணர்வினை கூகுள் பிளஸ் ஹேங்அவுட் தருகிறதென்பதே இதன் சிறப்பம்சம்.


0 comments:
Post a Comment