டிரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான
சாப்ட்வேர் புரோகிராம் தான் டிரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும். எனவே டிரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்.
CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

0 comments:
Post a Comment