இறுதியாக நோக்கியா லூமியா 920 இந்திய சந்தையில் களமிறங்கிவிட்டது. இந்த மொபைல் இந்த ஆண்டின் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த மொபைலின் விலை ரூ.38,199 ஆகும்.
நோக்கியா நிறுவனத்தால் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த மொபைல், இந்திய மொபைல் பிரியர்களின் 6 மாதகால எதிர்பார்ப்புகளைக் கடந்து தற்போது சந்தைக்கு வந்துள்ளது.
நோக்கியா லூமியா 920 மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்: 4.5 இன்ச் (1280 X 768) ப்யூர் மோசன் HD+ திரை, விண்டோஸ் 8, டியூவல் கோர் 1.5GHz ஸ்னாப்டிராகன் S4 பிராசஸர், 1GB RAM, 8.7 மெகாபிக்ஸல் ப்யூர்வியூ ரியர் கேமரா பின்புறம், 1.2 மெகா பிக்ஸல் முன்புறம், 32GB இன்டேனல் ஸ்டோரேஜ் மெமரி, வயர்லெஸ் சார்ஜிங், Wi-Fi, புளுடூத், மைக்ரோ-USB, 2000 mAh பேட்டரி, நீள அகல தடிமன் முறையே 130.3 மிமீ X 70.8 மிமீ X 10.7 மிமீ
கண்ணைக் கவரும் நோக்கியா லூமியா 920 மக்களின் மனதையும் கவருமா? பார்க்கலாம்!!!

0 comments:
Post a Comment