வந்து போனவர்கள்

Thursday, November 22, 2012

MS WORD TIPS - வேர்டை வேகமாக இயக்க


நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இணையத்திற்கு இணையாக நாம் பயன்படுத்துவது எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பாகும். இதில்
அனைவரும் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பே. பொதுவாக தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் அடிப்படையைத் தெரிந்து கொண்டவர் அனைவரும், வேர்ட் புரோகிராம் பயன்படுத்துகின்றனர். இதற்கெனத் தனியே எந்த சிறப்பு பயிற்சி வகுப்பிற்கும் செல்வதில்லை. இதனாலேயே, வேர்ட் தரும் வசதிகளில் 10 சதவிகித வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். நம் வேலைகளை எளிதாக்கவும், வேகமாகச் செயல்படவும் வேர்ட் பல டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் நீண்டு கொண்டே செல்லும் மெனுக்களிலும் டூல்பார்களிலும் புதைந்து இருப்பதனால், பலர் இவற்றைக் கண்டு கொள்வதில்லை. இவற்றை விரித்துப் பார்த்தாலும், எப்படி பயன்படுத்துவது என்று தெரியாததனால், பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர். இவற்றில் சிலவற்றைப் பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம். வேர்ட் 2003, 2007 மற்றும் வேர்ட் 2010 ஆகிய தொகுப்புகளில் உள்ள சில டூல்ஸ்களை இங்கு காணலாம்.
1. டெம்ப்ளேட் பயன்படுத்தி நேரம் மிச்சம்: வேர்டில், டெம்ப்ளேட் எனப்படுபவை டாகுமெண்ட் தயாரிக்க ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்தக் கூடிய மாடல் கட்டமைப்பாகும். நாம் அடிக்கடி பயன்படுத்தும் டாகுமெண்ட், கடிதங்கள், கவர்களில் டெக்ஸ்ட் அமைத்தல் ஆகியவற்றிற்கு இவற்றைப் பயன்படுத்தலாம். வேர்ட் இதற்கான அழகான, பயனுள்ள டெம்ப்ளேட்களைக் கொண்டுள்ளது.
வேர்ட் 2003ல் இவற்றைப் பயன்படுத்த File கிளிக் செய்து, பின்னர் New என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வலது பக்கம் ஒரு பிரிவில் சில வசதிகள் காட்டப்படும். இங்கு ‘On my computer’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு டெம்ப்ளேட் என்ற தலைப்பில் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் பல வகைகளுக்கான தலைப்பு காட்டப்படும். உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Create New என்ற பிரிவில் உள்ள Document radio பட்டன் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திட உங்களுக்கு டாகுமெண்ட் அமைக்க டெம்ப்ளேட் கிடைக்கும். 
வேர்ட் 2007ல், Office பட்டன் தேர்ந்தெடுத்து, New என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Installed Templates என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2010ல், File>New> Sample Templates எனச் செல்லவும். ஏதேனும் ஒரு டெம்ப்ளேட்டினைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Create என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். 
சில டெம்ப்ளேட்டுகளில், எப்படி அதனைக் கையாள்வது என்று காட்டப்பட்டிருக்கும். ஆனால் இதில் ஒன்றும் சிக்கல் இருக்காது. கையாள்வதற்கான வழிமுறைகள் தேவையில்லை. நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட்டை இதில் அமைத்து வழக்கம் போல டாகுமெண்ட்டை சேவ் செய்திட வேண்டியதுதான். ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டினை சேவ் செய்திட, F12 கீயை அழுத்த வேண்டியதுதான். பின்னர் கிடைக்கும் File type கீழ்விரி மெனுவில், Word Template என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும். 
2. டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் இயங்க: மிகப் பெரிய டாகுமெண்ட்களில் இயங்குகையில், இரு வேறு பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்வது சற்று சிரமமாயிருக்கும். ஒவ்வொரு முறையும், பக்கங்களை ஸ்குரோல் செய்து செல்வது வேலைப் பளுவினைத் தருவதுடன், பல நேரங்களில், செல்ல வேண்டிய பிரிவு சீக்கிரம் கிடைக்காது. இதற்கு வேர்ட் எளிய வழி ஒன்றைத் தருகிறது. ஒரே நேரத்தில், டாகுமெண்ட் ஒன்றின், இரண்டு பிரிவுகளைத் திறந்து வைத்து, இயங்குவதற்கான வழியைத் தருகிறது. இதனால், திரையில், ஒரே நேரத்தில், டாகுமெண்ட்டின் இரண்டு பிரிவுகளைப் பார்க்கும் வசதியும், அவற்றில் பணியாற்றும் வசதியும் கிடைக்கிறது. இந்த வசதியைக் கீழ்க்கண்டவாறு பெறலாம்.
வேர்ட் 2003ல், Window என்பதில் கிளிக் செய்து, Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010ல், View என்பதில் கிளிக் செய்து, Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மவுஸ் கர்சரை, எந்த இடத்தில் டாகுமெண்ட்டில் பிரிக்க வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று, லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது டாகுமெண்ட் இரண்டு பிரிவுகளில் காட்டப்படும். இந்த இரண்டு பிரிவுகளையும் தனித்தனியே உருட்டி, மேல் கீழாகச் செல்லலாம். திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஸூம் செய்தும் பயன்படுத்தலாம். 
பிரிக்கப்பட்டிருக்கும் இடத்தினை மாற்ற, இரண்டையும் பிரிக்கும் கோட்டில் கிளிக் செய்து, புதிய இடத்திற்கு இழுத்து விடலாம். இந்த பிரிவை நீக்க, பிரிக்கும் கோட்டில் மவுஸ் கர்சரை வைத்து, டாகுமெண்ட்டின் மேல் அல்லது கீழ் பகுதிக்கு இழுக்கலாம். அல்லது மேலே காட்டியுள்ளபடி மெனுவைப் பெற்று, அதில் Remove Split என்பதில் கிளிக் செய்திடலாம். 
3. ஒரு கடிதத்தைப் பலருக்கு தனித்தனியே அச்செடுக்க: பல வேளைகளில், ஒரே கடித வாசகத்தைப் பலருக்கு அனுப்ப வேண்டியதிருக்கும். ஆனால்,இதனைப் பொதுவான ஒரு கடிதமாக அனுப்பினால், அது சுற்றறிக்கை போல் ஆகிவிடும். ஒவ்வொருவரின் பெயர், அழைக்கும் உறவு முறை, முகவரி போன்றவற்றை அமைத்து தயாரித்தாலே, அது தனிநபருக்கான அன்புக் கடிதமாக மாறும். வேர்ட் இதற்கான வசதியை மெயில் மெர்ஜ் (Mail Merge) என்ற பெயரில் வழங்குகிறது. 
இதனை வேர்ட் 2003ல் பெற, Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Letters and Mailings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Mail Merge என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007/2010ல் Mailings என்ற டேப்பில் கிளிக் செய்து, Start Mail Merge என்ற பட்டனை அழுத்தவும். இந்த விண்டோவில் பல நிலைகளில் உங்கள் தேவைகள் என்னவெனத் தரவேண்டியதிருக்கும். நீங்கள் யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டுமோ, அவர்கள் பெயர், அழைக்கும் பெயர், முகவரிகள் என அனைத்தையும் ஒரு பைலில் அமைத்து, அச்சடிக்க கொடுக்க வேண்டும். மெயில் மெர்ஜ் மூலம், இமெயில், கடித உறைகள், லேபில்கள் மற்றும் முகவரி பட்டியல் என அனைத்தும் தயாரிக்கலாம். 
4. இரண்டு டாகுமெண்ட்களை அருகே அமைத்துக் காண: நாம் பல முறை இரண்டு டாகுமெண்ட்களை ஒப்பிட்டுப் பார்த்து, திருத்தங்களை மேற்கொள்வோம். இந்த சந்தர்ப்பங்களில், நாம் விரும்பும் டாகுமெண்ட்களை ஒரே திரையில் விரித்து வைத்துக் காணும் வசதியை வேர்ட் தருகிறது. 
இந்த வசதியை, வேர்ட் 2003ல் பெற, முதலில் நீங்கள் காண விரும்பும் டாகுமெண்ட்களைத் திறக்கவும். பின்னர், Window என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Compare Side by Side என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இரண்டு டாகுமெண்ட்களும், திரையில்சரி பாதியை எடுத்துக் கொண்டு காட்சி அளிக்கும். ஒன்றை ஸ்குரோல் செய்தால், இன்னொன்றும் ஸ்குரோல் ஆகும். இந்த வசதியை நிறுத்த வேண்டும் என்றால், Compare Side by Side டூல்பாரில் இடது பக்கம் இருக்கும் சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். 
வேர்ட் 2007/2010ல், View என்பதில் கிளிக் செய்து, பின்னர் View Side by Side கிளிக் செய்திடவும். மேலே காட்டியபடி, டாகுமெண்ட்கள், அருகருகே கிடைக்கும். ஆனால் கூடுதல் டூல்பார்கள் காட்டப்பட மாட்டாது. எனவே, இரண்டு டாகுமெண்ட்களும் ஒரே நேரத்தில் ஸ்குரோல் ஆவதைத் தடுக்க, View கிளிக் செய்து, அடுத்து Synchronous Scrolling என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2007ல் இது ஒரு ஐகானாகக் கிடைக்கும். 
அருகருகே டாகுமெண்ட்கள் காட்டப்படுவதனை முடித்து வைக்க, வேர்ட் 2003ல், Window கிளிக் செய்து, பின்னர் Close Side by Side என்பதனைக் கிளிக் செய்திடவும். வேர்ட் 2007/2010ல் View கிளிக் செய்து, தொடர்ந்து View Side by Side என்பதனைக் கிளிக் செய்திடவும். 
5. ஹெடர் மற்றும் புட்டர் இணைக்க: டாகுமெண்ட் பக்கங்களில், மேலாகவும், கீழாகவும் சில டெக்ஸ்ட், படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என விரும்புவோம். இவற்றை அமைக்கும் இடங்களே ஹெடர் மற்றும் புட்டர் என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக நூல்கள் தயாரிக்கும்போதும், பெரிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் அமைக்கும் போதும், அத்தியாய தலைப்புகள், பக்க எண்கள் ஒவ்வொரு பக்கத்திலும், குறிப்பிட்ட இடத்தில் அமைப்பது வழக்கமான முறை. இவற்றை எப்படி அமைக்கலாம் என்பதனைப் பார்க்கலாம்.
வேர்ட் 2003ல், View என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Header and Footer என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பக்கத்தின் மேலாகவும் கீழாகவும் புள்ளிகளில் உருவான பாக்ஸ் ஒன்று காட்டப்படும். Header and Footer டூல்பார் ஒன்றும் கிடைக்கும். இந்த டூல்பாரில் Insert Auto Text என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இதில் பல பிரிவுகள் கிடைக்கும். இதில் சில தானாகவே சில விஷயங்களை அமைத்துத் தரும். எடுத்துக்காட்டாக, டாகுமெண்ட்டை அமைப்பவர் மற்றும் நாள் ஆகியவற்றை அமைக்க விரும்பினால், Author, Page# and date என்பதில் கிளிக் செய்திடவும். இவை தானாக அமைக்கப்படும். தானாக, பக்கங்களின் எண்கள் மட்டும் அமைக்கப்பட வேண்டும் எனத் திட்டமிட்டால், Auto Text என்ற பட்டன் அருகே உள்ள ஐகானை அழுத்தவும். பலவகைகளில் பக்க எண்களை அமைப்பதற்கான பார்மட்கள் காட்டப்படும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பின்னர், இதில் உள்ள Close பட்டனை அழுத்தி டாகுமெண்ட்டுக்குத் திரும்பலாம்.
வேர்ட் 2007/2010ல், Insert மற்றும் Header (or Footer) அழுத்தி, பின்னர் ஏதேனும் ஒரு style தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது Design tab தானாகத் திறக்கப்படும். அடுத்து ‘Type text’ என்ற பகுதியில் கிளிக் செய்திட வேண்டும். 
இப்போது நாம் அமைக்க விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்கலாம். அடுத்து Page Numbers அல்லது Date and Time தேர்ந்தெடுத்தால், இதில் நாம் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். மீண்டும் டாகுமெண்ட் திரும்ப Close Header and Footer என்பதில் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் ஹெடர் அல்லது புட்டரில் உள்ளதைத் திருத்த வேண்டும் எனில், ஹெடர் அல்லது புட்டரில், டபுள் கிளிக் செய்தால் போதும்.

பதிவுகளைஇலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

1 comments:

பயனுள்ள பகிர்வு...

விளக்கங்கள் அருமை... நன்றி...

Post a Comment

Categories

(IMEI (1) 100 கோடி டவுன்லோட்கள் (1) 2012 buget (1) 2012 delhi auto expo (2) 2012 டெல்லி ஆட்டோ கண்காட்சி (1) 2012 பட்ஜெட் (1) 3d technology (3) 3G (1) 3டி ஐபோன் (1) 3டி டெக்னாலஜி (1) aakash (1) aakash-2 (1) accessories (2) acer (2) Activity Monitor (1) affecting health (2) aircel (1) alcatel (1) amazon (1) amir khan (1) amphibian car (1) android (4) android 4.2 new feature (1) android 4.2 os (1) android application (1) android ics tablet (1) android jellybean OS (1) android mobile (1) android operating system (1) android os (1) android phones (1) android smartphone (1) angel pad (1) angry birds (1) angry brides (1) apple (10) apple ipad (1) application for smartphones (1) archos (2) arnova (1) as office (1) Aspect Ratio (1) asus (1) ativ smart pc pro india price (1) auto news (2) auto show (1) auto tips (1) automobiles (5) avast (1) b11 (1) bajaj auto (1) bajaj pulsar 200 ns (1) bamboo mobile (2) battery (1) BitDefender (1) blackberry (4) blackberry 7 phone models (1) blackberry low priced (1) bluetooth (1) BLUETOOTH TECHNOLOGY (1) bmw (1) brain (1) browser (2) bsnl (1) bsnl news (1) bsnl tarriffs (1) budget mobile (7) bugatti (1) bugatti veyron sport (1) Bullets and Numbering (1) camera (1) car (1) car showroom (1) cdma devices (1) celkon (1) cellphone radiation (2) cellphones (2) CELLULAR BROADCASTING (1) classmate (1) clik application (1) COMBIN (1) commands (1) compressed folder (1) computer (68) concept (1) concept model (1) convertible (1) cool tech (1) cowon (1) csk (1) dell (1) detroit auto show (1) digitelwaves (1) dolby sound (1) dual sim mobile (8) e carbo (1) e-book (1) earthquake application (1) element (1) energy saving (1) ericsson (1) Excel (19) extra charge (1) facebook (13) facebook phone (1) facebook warns employers (1) firefox (2) firefox 10 version (1) Flipboard (1) fly (2) folder (2) four wheeler (2) FREE MOBILE RECHARGE (1) fujitsu (1) Fun tab New Android ICS Tablet (1) galaxy s 3 (2) galaxytab (1) game application (1) games (3) gaming (1) geneva motor show (1) gesture typing (1) gigabyte (1) gmail (12) gnine (1) google (7) google drive (1) Google Earth (1) google logo (1) google maps (1) google music service launch (1) google nexus 10 (1) Google PageRank (1) google play (1) google plus hangouts (1) google+ (1) Gotech funtablet price (1) groups for schools (1) Hard Disk (1) harry potter (1) headset (2) health tips (1) house (1) HP (1) hp windows 7 (1) htc (1) HTC M7 smartphone (1) hublot (1) hybrid smartphone (1) i v bridge processor (1) iconia (1) ideapad (1) ideatab (1) IIS (1) iNaked (1) indian sales (1) intel (1) Internet (5) internet facility in train (1) intex (2) intex tablet (1) ipad (2) ipad3 (2) iphone (1) iphone 4S (1) ipl (1) ira (1) isro (1) itunes match service (1) jabra (1) jadeja (1) jelly bean (1) karbonn (1) kodak (1) la fleur (1) laptop (12) laser printer (1) launch new tablets (1) launching event (1) lava (1) leader (1) lenova (1) lenovo (2) lg (5) LG Mobile (1) linux (1) low cost tablet (1) lpg kit (1) macbook (1) mahindra (1) malware (1) manage android phone memory (1) manage memory (1) maruti 800 (1) Media Converter (1) mediaplayer (1) mercedes benz (1) mercury (1) micromax (1) microsoft (1) microsoft surface (1) mid range phone (1) mk802 (1) mobile (23) mobile phones (1) mobilephone (30) mobilephones (1) more talk time (1) mother's day gift (1) motorola (1) MS OFFICE (2) ms word (47) mtab (1) music (3) navigation system (1) Nec (1) Network (1) new feature (1) new ipad (2) new OS (3) new page (1) new tablet (1) newipad (1) news (24) NEWS PAPER (1) nfc technology (1) nokia (17) nokia lumia 920 (2) Nokia Tablet (1) nokia tablets (1) NOKIA X 2-02 (1) notebook (1) notepad (2) november 13 (1) olpc (1) one billion downloads (1) online games (1) pad (1) paint (1) panasonic (1) pantech (1) password (2) pc (1) pentagon (1) photo sphere (1) playful (1) playstation (1) power Point (5) powergrid (1) POWERPOINT (12) pre-paid customers (1) price cut (1) price slashed (1) printer (1) Project Glass (1) railway department (1) reality show (1) recharge (1) reliance autozone (1) reset (1) rikomagic (1) rio (1) roccat (1) rs 75490 (1) rumors (1) safe (1) samsung (9) Samsung Galaxy Note 3 (1) samsung galaxy note 800 (1) satellite (1) satyameva jayate (1) secret codes (1) Shortcut (2) shortener url (1) sict (1) Slider Mobile (1) smart (1) smartphone (23) smartphones (1) smarttab (1) sms (3) social media (3) social Networking (7) software (23) sony (3) sony ericsson (1) spark (1) spice (1) stress (1) studybook (1) tablet (31) tablets (1) Tags: hp laptop windows 8 (1) Tags: mobile phones (1) Taskbar (1) tata motors (1) technology (3) telecom regulatory authority of india (1) Thin Film Transistor (1) timeline (1) tips (18) tom tom (1) top 10 phones (1) toshiba (2) Touchscreen (1) translate (1) triks (1) tv commercial (1) two wheeler (1) updates in social media (1) ups (1) us department of defence (1) USB (1) username (1) valentinesday (1) video (1) video chat (1) video converter (1) viewpad (1) viewphone (1) viewsonic (1) virginatlantic (1) virus (5) vista (1) vlc 2.0 (1) vodafone (1) watch (1) wave (1) WAZZUB (2) WEBSITE (1) wellness (1) WhatsApp (1) WIFI (2) wifi connectivity (1) wikipad (1) Windows (9) windows 8 (2) windows 8 phone (1) windows facebook messenger (1) Windows Mobile (1) windows tablets (1) windows7 (4) WIRELESS (1) WIRELESS BROADCASTING (1) wishtel (1) word (4) World (1) xcite (1) xuv 500 (1) you tube (3) zinc (1) zipped folder (1) zotac (1) அஃபெக்டிங் ஹெல்த் (2) அதிக டாக் டைம் (1) அப்ளிக்கேஷன் ஃபார் ஸ்மார்ட்போன் (1) அமீர் கான் (1) அமெரிக்க ராணுவ தலைமையகம் (1) அமேசான் (1) அர்னோவா (1) அலுவலகம் (1) அல்காடெல் (1) அறிவியல் (1) அன்னையர் தின பரிசு (1) ஆகாஷ் (1) ஆகாஷ்-2 (1) ஆக்சஸெரீஸ் (1) ஆங்கிரி பிரைட்ஸ் (1) ஆங்கிரி பேர்ட்ஸ் (1) ஆசஸ் (1) ஆட்டோ செய்திகள் (2) ஆட்டோ டிப்ஸ் (1) ஆட்டோ ஷோ (1) ஆட்டோமொபைல்ஸ் (5) ஆப்பிள் (10) ஆம்பிபியன் கார் (1) ஆர்கோஸ் (2) ஆன்ட்ராய்டு (3) ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் (1) ஆன்ட்ராய்டு டேப்லெட் (1) ஆன்ட்ராய்டு போன் மெமரி (1) ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் ஓஎஸ் (1) ஆஷா 303 (1) இ கார்போ (1) இ-புக் (1) இணைய பாதுகாப்பு (1) இணையதளம் (2) இணையம் (1) இரட்டை சிம் (1) இன்டர்நெட் (2) இன்டல் (1) இன்டியன் சேல்ஸ் (1) இன்டெக்ஸ் (4) இன்டெக்ஸ் டேப்லெட் (1) உள்ளூர் கட்டணங்கள் (1) எக்ஸெல் (3) எக்ஸைட் (1) எக்ஸ்ட்ரா சார்ஜ் (1) எக்ஸ்யூவி 500 (1) எச்பி (1) எம்கே802 (1) எம்டேப் (1) எரிக்சன் (1) எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் (1) எலமென்ட் (1) எல்பிஜி கிட் (1) எல்ஜி (5) என்இசி (1) என்ஃப்சி டெக்னாலஜி (1) எஸ்எம்எஸ் (1) ஏசர் (2) ஏஞ்சல் பேட் (1) ஐஎஸ்ஆர்ஓ (1) ஐகோனியா (1) ஐடியாடேப் (2) ஐபேடு (1) ஐபேட் (1) ஐபேட்3 (1) ஐபோன் 4-எஸ் (1) ஐரா (1) ஒஎல்பிசி (1) ஃபயர்ஃபாக்ஸ் 10 வெர்ஷன் (1) ஃபேஸ்புக் (6) ஃப்ளை (2) கணிணி (5) கணிணி ஹார்ட்வேர் (3) கணிணி மென்பொருட்கள் (2) கணினி (5) கணினி புதிர்கள் (1) கம்ப்யூட்டர் (5) கம்ப்யூட்டர் வைரஸ் (1) கம்ப்ரஸ்டு ஃபோல்டர் (1) கம்யூட்டர் (34) கர்வ்-8530 (1) கவன் (1) காதலர் தினம் (1) கார் (2) கார் ஷோரூம் (1) கார்பரேட் (1) கார்பன் (1) கிகாபைட் (1) கிருமி (1) குரூப்ஸ் ஃபார் (1) குறைந்த விலை டேப்லட் (1) கூகுள் (4) கூகுள் குரோம் (1) கூகுள் ப்ளஸ் (1) கேமரா (1) கேமிங் (1) கேம் அப்ளிக்கேஷன் (1) கேம்ஸ் (2) கேலக்ஸி எஸ்-3 (1) கேலக்ஸி நோட் 3 (1) கேலக்ஸிடேப் (1) கொடாக் (1) க்ளாஸ்மேட் (1) சத்திய மேவே ஜயதே (1) சாம்சங் (9) சாம்சங் கேலக்ஸி (1) சிக்ட் (1) சிறப்பு சலுகைகள் (1) சின்க் (1) சீனா (1) சூரிய புயல் (1) செயற்கை கோள்கள் (1) செய்திகள் (2) செல்கான் (1) செல்போன் (2) செல்போன் ரேடியேஷன் (2) சோடாக் (1) சோனி (3) சோனி எரிக்சன் (1) சோனி எரிக்ஸன் (1) சோஷியல் நெட்வொர்கிங் (5) சோஷியல் நெட்வொர்க் (1) சோஷியல் மீடியா (1) டாடா மோட்டார்ஸ் (1) டாம் டாம் (1) டாய்லட் (1) டால்பி சவுன்டு (1) டியூவல் சிம் மொபைல் (6) டிவி விளம்பரம் (1) டிவைஸ் மேனேஜர் (1) டிஜிட்டல்வேவ்ஸ் (1) டூ வீலர் (1) டூயல் சிம் (1) டேப்லட் (6) டேப்லெட் (26) டைம்லைன் (1) ட்ராய் (1) தங்கம் (1) தடை (1) தட்டச்சு (1) தொழில்நுட்பம் (1) தோஷிபா (2) நியுஐபேட் (1) நியூ ஐபேட் (2) நியூ ஓஎஸ் (1) நியூ பேஜ் (1) நியூஸ் (10) நேக்கியா (1) நேவிகேஷன் சிஸ்டம் (1) நோக்கியா (13) நோக்கியா எக்ஸ் 2-02 (1) நோக்கியா லூமியா 710 (1) நோட்புக் (1) பட்ஜெட் மொபைல் (6) பட்ஜெட்போன்ஸ் (1) பவர்க்ரிட் (1) பழைய மொபைல் போன்கள் (1) பனோசோனிக் (1) பன்டெக் (1) பஜாஜ் ஆட்டோ (1) பஜாஜ் பல்சர் 200என்எஸ் (1) பாக்டீரியா (1) பாஸ்வேர்டு (1) பி11 (1) பிஎம்டபிள்யூ (1) பிஎஸ்என்எல் (1) பிளாக்பெரி (1) பிளாக்பெர்ரி (2) பிஜிட்சு (1) புகாட்டி (1) புக்மார்க்குகள் (1) புதிய டேப்லட்கள் அறிமுகம் (1) பேட் (1) பேட்டரி (1) பேம்பூ மொபைல் (1) பேஸ்புக் (3) பேஸ்புக் போன் (1) ப்ளாக்கர் (1) ப்ளாக்கை அழகுபடுத்த (1) ப்ளேபுல் (1) ப்ளேஸ்டேசன் (1) மவுஸ் (2) மனஅழுத்தம் (1) மஹிந்திரா (1) மாருதி 800 (1) மால்வேர் (1) மாற்றம் (1) மிட் ரேன்ஜ் போன் (1) மியூசிக் (3) மிலக்ரோவ் (1) மீடியாப்ளேயர் (1) மெர்க்குரி (1) மெர்டிசிடிஸ் பென்ஸ் (1) மேக் (1) மேக்புக் (1) மேனேஜ் மெமரி (1) மைக்ரோசாஃப்டு (1) மைக்ரோசாப்ட் (2) மைக்ரோமேக்ஸ் (1) மொபைல் (11) மொபைல் போன்கள் (1) மொபைல்கள் (1) மொபைல்போன் (26) மோட்டோரோலா (1) யூசர்னேம் (1) ரகசிய குறியீடு (1) ரிக்கோமேஜிக் (1) ரியோ (1) ரீ-சார்ஜ் (1) ரீசைக்கிள் (1) ரோசட் (1) ரோபோ (1) லா ஃபுளூவர் (1) லாவா (1) லீடர் (1) லெனோவா (3) லேப்டாப் (8) வ‌ணிக‌ம் (1) வழிமுறைகள் (1) வாட்ச் (1) விஎல்சி 2.0 (1) விக்கிபேட் (1) விண்டோஸ் (1) விண்டோஸ் 8 (2) விண்டோஸ் 8 போன் (1) விண்டோஸ் ஃபேஸ்புக் மெஸென்ஜர் (1) விண்டோஸ்7 (2) விண்டோஸ்8 (1) வியூ சோனிக் (1) வியூபோன் (1) வியூவ்சோனிக் (1) வியூவ்பேட் (1) விஸ்டல் (1) வீடியோ கால் (1) வெப்சைட் (1) வெர்ஜின் அட்லாண்டிக் (1) வேவ் (1) வைரஸ் (1) வோடஃபோன் (1) வோடோபோன் (1) ஜப்ரா (1) ஜினைன் (1) ஸிப்படு ஃபோல்டர் (1) ஸ்டடிபுக் (1) ஸ்பார்க் (1) ஸ்பைஸ் (1) ஸ்மார்ட் (1) ஸ்மார்ட் ஃபோன் (1) ஸ்மார்ட்டேப் (1) ஸ்மார்ட்போன் (20) ஹப்லாட் (1) ஹாரி பாட்டர் (1) ஹெச்டிசி (1) ஹெச்டிசி எம்7 (1) ஹெட்செட் (2)
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More