இந்த புதிய சாம்சங் லேப்டாப்பில் ஏராளமான உயர்தர தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. இந்த புதிய லேப்டாப்பில் இன்டல் ஐவி பிரிட்ஜ் டூவல் கோர் ஐவ5 ப்ராசஸர் உள்ளது. அதனால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும். அதோடு இந்த லேப்டாபு ஒரு முழுமையான எச்டி வசதி கொண்ட 11.6 இன்ச் டிஸ்ப்ளேயையும் கொண்டுள்ளது.
மேலும் இந்த லேப்டாப்பில் உள்ள கீபோர்டைத் தனியாக பிரித்து எடுக்க முடியும். இந்த லேப்டாப்பில் 4ஜிபி ரேம், 128ஜிபி எஸ்எஸ்டி ட்ரைவ் மற்றும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. அதனால் இந்த லேப்டாப்பில் அருமையான பாடல்களைக் கேட்க முடியும்.
இந்த லேப்டாப்பில் இரண்டு கேமராக்கள் உள்ளன. அதாவது பின்புறம் 5.0எம்பி கேமராவும், முகப்பில் 2.0எம்பி கேமராவும் இந்த லேப்டாப்பில் உள்ளன. இதன் பேட்டரி இந்த லேப்டாப்புக்கு 8.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.
இவற்றைத் தவிர்த்து இந்த லேப்டாப்பில் எஸ்-பென் ஸ்டைலஸ், மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி, மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், ஹெட்போன் ஜாக் மற்றும் சாம்சங்கின் பிராப்ரியேட்டரி டோக் போர்ட் போன்ற வசதிகளையும் பார்க்கலாம்.

4 comments:
புதிய தகவலுக்கு நன்றி...
நல்லத் தகவல் ... நன்றி
welcome
online job in tamil
tamil online job site > CLick www.padugai.com
Post a Comment