வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும்
காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம். இதே தோற்றத்தில், திருத்தங்களையும் மேற்கொள்ள வசதி உள்ளது. ஆனால் எப்படி மேற்கொள்வது என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராய் உள்ளது. அதை இங்கு பார்க்கலாம்.
வேர்ட் 2007 தொகுப்பில், பிரிண்ட் பிரிவியூ டூல்பாரில் கிடைக்கும் பிரிவியூ குரூப்பில், Magnifier டூலை, டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு நீக்கவும். இவ்வாறு செய்தவுடன், ஏற்கனவே பிரிவியூ தோற்றத்தில் காணப்படும் கர்சர் வழக்கமான ஐபீம் போலக் காட்சி அளிக்கும். டாகுமெண்ட் நார்மல் வியூவில் கிடைக்கும். உடன் டாகுமெண்ட்டை எடிட் செய்திடலாம்.

1 comments:
பயனுள்ள தகவல்... நன்றி...
Post a Comment