எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், செல் ஒன்றில் கிழமைகளின் பெயரை டைப் செய்தால், அந்த பெயரின் முதல் எழுத்து தானாகப் பெரிய எழுத்தாக அமைக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, monday என டைப் செய்தால், அது Monday என மாற்றப்படும். இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காரணத்தினால், நீங்கள் டைப் செய்தபடியே ‘monday’
அமைய வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கான செட்டிங்ஸ் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் அமைத்தால் போதும். ஒர்க்ஷீட்டைத் திறந்து கொள்ளுங்கள். இதில் Tools மெனு சென்று கிடைக்கும் மெனுவில், Auto Correct என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இப்போது எக்ஸெல் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும். இதில் Auto Correct என்ற டேப் தேர்ந்தெடுக்கப் படுவதனை உறுதி செய்திடவும். Capitalize Names of Days என்றுள்ள பாக்ஸில் செக் அடையாளத்தை எடுத்துவிட்டால், நீங்கள் விரும்பியபடி முதல் எழுத்து மாற்றப்பட மாட்டாது. பின்னர், ஓகே அழுத்தி வெளியேறவும்.

0 comments:
Post a Comment