
1.உங்கள் கணினியை மேம்பட்டதாக வைத்துகொள்ளுங்கள்:
உங்கள் கணினியின் பாதுகாப்பு மென்பொருள் ,உலவி (Security Software, Browser and Operating System) மேம்பட்டதாகவும் புதிய வெளியீடாகவும் இருப்பது அவசியம்.
கணினி போன்றே கைபேசி( Cell phone),குளிகை(Tablet),மற்ற இணைய கருவிகளையும் வைரஸ்களிலிருந்து காப்பது அவசியம்.
USB கருவிகளை பயன்படுத்தும் முன் Virus scan செய்ய மறக்காதீர்.
2. உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்:
உங்களுடைய இணைய கணக்கை (User Account) பல வழிகளிலும் சோதித்து (Verify) கொள்ளுங்கள்.
உங்களுடைய கடவுச்சொல்(Password) நீளமானதாகவும் வலிமையானதாகவும் இருக்க வேண்டும்.
தனித்தனி பயனர் கணக்குக்கும் (User Account) தனித்தனி கடவு சொல் (Password) பயன்படுத்துங்கள்.
3.இணையத்தில் இணையும் போது கவனம் அவசியம்:
வங்கி செயல்பாடுகளுக்கு https:// அல்லது shttp:// ஐ மட்டும் பயன்படுத்துங்கள் http:// பாதுகாப்பானது அல்ல.
மெயிலில் வரும் இணைப்புகளில் சந்தேகம் இருந்தால் அதை அழித்துவிடுங்கள்(Delete) அல்லது ஜன்க் மெயிலாக(Junk Mail) கொள்ளுங்கள்.
WiFi இணைப்புகளில் பாதுகாப்பு (Security) முறைகளை கையாளுங்கள்.
4.புத்திசாலியாக இருங்கள்:
நம்பிக்கையான இணயதளங்களை அறிந்து கொள்ளுங்கள்.அதை மட்டுமே பயன்படுத்தவும் செய்யுங்கள்.
உங்களின் விலைமதிப்பில்லா கணினி செயல்பாடுகளையும் படங்களையும்,காணொளிகளையும் கோப்புகளையும் Backup செய்து பாதுகாத்து கொள்ளுங்கள்
5.சிறந்த இணைய குடிமகனாக இருங்கள்:
உங்களுக்காகவும் மற்றவர்கள் நலனுக்காகவும் பாதுகாப்பான இணைய செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.
மேலதிக உதவிக்கு சைபர் கிரைம் போலிஸ் உதவியை நாடலாம்.
0 comments:
Post a Comment