
அமீர் கானின் ‘சத்திய மேவ ஜெயதே’ நிகழ்ச்சி சமூக வலை தளங்களை வெகுவாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. ஆம், இந்த நிகழ்ச்சி குறித்து 2 நொடிக்கு ஒரு கருத்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குவித்து வருகிறது.
ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி-1 தொலைக்காட்சியிலும் நேற்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிய இந்த
நிகழ்ச்சி பற்றி, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி அப்டேட்கள் குவிகிறது.மொத்தமாக 4 மணி நேரத்திற்கு 7,593 அப்டேட்களை சமூக வலைத்தளங்களில் பெற்றுள்ளது. அமீர் கானின் இந்த சத்திய மேவே ஜெயதே நிகழ்ச்சியில் பெண் சிசு கொலை பற்றிய கருத்து இடம் பெற்றிருந்தது. இதை பற்றி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் அதிக கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.
நண்பர்களுக்கு இடையில் கருத்து பரிமாறல்களுக்காக உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்ததளங்கள் இப்போது கருத்து பரிமாறல்களுக்கு ஒரு சிறந்த மேடையாகவும் இருந்து வருவது.
0 comments:
Post a Comment