
இந்திய நிறுவனமான கார்பன், கே-டி-81 காஸ்மோஸ் என்ற புதிய மொபைலை உருவாக்கி உள்ளது. இந்த மொபைலை பட்ஜெட் விலையில் எளிதாக பெற முடியும். குறைந்த விலையாக இருந்தாலும் 3.20 இஞ்ச் திரை வசதியினை கொண்டது.
இதனால் தகவல்களை 2048 X 1536 பிக்ஸல் திரை துல்லியத்தில் தெளிவாக பெற முடியும். கறுப்பு நிறத்தில் கவர்ச்சிகரமான வடிவமைப்பை கொண்ட இந்த மொபைல் மல்டி டச் திரையினை வழங்கும்.
டிஜிட்டல் சூம் வசதியினை வழங்கும் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த மொபைலில் பெறலாம்.
இதில் உள்ள டால்பி சவுன்டு தொழில் நுட்பத்தின் மூலம் துல்லியமான ஒலி திறனை வழங்கும். 16 ஜிபி உள்ள வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியின் மூலம் தேவையான தகவல்களை ஸ்டோர் செய்து கொள்ள முடியும். பட்ஜெட் விலை மொபைலாக இருந்தாலும் இந்த மொபைலில் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினையும் கொடுக்கும்.
மேலும் இதில் 1,000 எம்ஏஎச் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. கார்பன் நிறுவனத்தின் இந்த கே-டி-81 காஸ்மோஸ் மொபைலை ரூ.4,500 விலை கொண்டதாக இருக்கும்.
0 comments:
Post a Comment