சென்ற வார மொபைல் சந்தையில் உலா வந்த போது, சில வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப் பட்ட மொபைல் களை வாங்குவதாக தெரிவித்தனர். அவர்கள் விரும்புவதனை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டதாலும், மற்ற அம்சங்களும் நன்றாக இருப்பதாகவும் கூறினார்கள். இங்கு இசை ரசிகர்கள் விரும்பிய சில மொபைல்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
1. நோக்கியா என்ஸ்3-02: இசையினை ரசிக்க விரும்பும்
வாடிக்கையாளர்களுக்கு, ஒரே டச் பட்டன் கொடுத்து வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த நோக்கியா மொபைல். அது மட்டுமின்றி, ஸ்லிம்மாகவும், அழகாகவும், எடை குறைவாகவும் அமைந் துள்ளது இது. இதன் மெமரி 50 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை உயர்த்தலாம். சுத்தமான வெள்ளியின் வண்ணம், டார்க் கலர், பெட்ரோல் நீலம், இளஞ்சிகப்பு மற்றுல் லிலாக் என மனசு விருப்பப்படும் வண்ணங்களில் இது கிடைக்கிறது. பார் வடிவ போனாக ஒரு சிம்மினை இது இயக்குகிறது.
இதன் கேமரா 5 எம்.பி. திறனுடன் வீடியோவினையும் சிறப்பாக பதிந்து இயக்குகிறது. டிஜிட்டல் ஸூம் 4 எக்ஸ் வசதி உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில் பெறுதல் என வசதிகளைக் கொண்டதாக உள்ளது. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியன இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்கிறது. நெட் வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,750.
2. சோனி எரிக்சன் லைவ் வாக்மேன்: இசையை ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு உகந்த மொபைல் போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் நினைவகத்தினை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தி, அதிகமான எண்ணிக்கை யில் பாடல்களைப் பதிந்து இயக்கி ரசிக்கலாம். எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வி2.3 இயங்குகிறது. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் இயக்கம் உள்ளது. A2DP இணைந்த புளுடூத், 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில் பெறுதல் என வசதிகளைக் கொண்டிருக்கிறது. போன் மெமரி 320 எம்பி ஆகவும், ராம் மெமரி 512 எம்பி ஆகவும் உள்ளன. ஒரு சிம் இயக்கத்தில் நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. திரை 3.2 அங்குல அகலத்தில், எல்.சி.டி. டச் கெபாசிடிவ் திரையாக உள்ளது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளுக்கென 0.3 எம்.பி திறன் கொண்ட முன்புற கேமராவும் கிடைக்கிறது. இது 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் திறனும் கொண்டதாக உள்ளது. இதன் பரிமாணம் 106மிமீ x 56.5மிமீ x 14.2 மிமீ . எடை 115 கிராம். அதிக பட்ச விலை ரூ. 13,650.

0 comments:
Post a Comment