பல வாசகர்கள், தாங்கள் தமிழில் ஆவணங்களை அதிகம் உருவாக்கு வதாகவும், அப்போது வரிகளின் கீழாக தொடர்ந்து சிகப்பு கோடுகள் கிடைக் கின்றன. இதனை நிறுத்த முடியாதா? எனக் கேட்கின்றனர். இவற்றை நிறுத்தலாம். முதலில் இது எதற்காக எனப் பார்க்கலாம். வேர்டில் ஆவணங்களை ஆங்கிலத்தில் தயாரிக்கும் போது, ஒவ்வொரு சொல்லும் டைப் செய்யப்படுகையில், பின்னணியில் அந்த சொற்கள், ஓர் அகராதியில்
உள்ள சொற்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. அப்போது அகராதியில் இல்லாத சொற்கள் டைப் செய்யப்பட்டால், சிகப்பு கோடுகள் சொற்களின் அடியில் காட்டப்பட்டு, சொல்லின் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன என்று காட்டுகின்றன. மேலும் இலக்கணப்பிழைகள் இருந்தாலும் இவை காட்டப்படுகின்றன.
வேர்ட், தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் என்று உணர்ந்து உங்கள் கீ அழுத்தத்திற்கு நேரான எழுத்துக்களையும் சொற்களையும் எடுத்துக் கொண்டு, அவை தவறான ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணம் உடையவை என்ற அடிப்படையில் சிகப்பு கோட்டினைத் தருகிறது. இந்த செயல்பாட்டினை நீக்க எளிதான வழி எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை காணும் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுதான். இதற்கு டூல்ஸ் அழுத்தி, அதில் ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் ஆப்ஷன்ஸ் விண்டோ வைக் காட்டும். இதில் ஸ்பெல்லிங் அண்ட் கிராமர் என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Check spelling as you type மற்றும் Check grammar as you type என இரு பிரிவுகள் காட்டப்படும். இதன் அருகே உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டால், இந்த பிழை திருத்தும் பணி நிறுத்தப்படும். சிகப்பு வண்ணத்தில் கோடுகள் வராது. மீண்டும் இந்த வசதி ஆங்கிலத்தில் டாகுமெண்ட்களை உருவாக்கும்போது வேண்டும் என்றால், இதே முறையில் சென்று, மேலே குறித்த இரு வரிகள் எதிராக, டிக் அடையாளத்தினை அமைத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

1 comments:
நன்றிகள் பகிர்ந்த நண்பனுக்கு
Post a Comment