ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் தன் இடத்தை ஓரளவாவது தக்க வைத்துக்கொள்ளும் நோக்கத்துடன், ஆர்.ஐ.எம். நிறுவனம் தன் பிளாக்பெரி ஸ்மார்ட் போன்களின் விலையை 27% வரை குறைந்துள்ளது. நான்கு மாடல்களின் விலை குறைக்கப் பட்டுள்ளது. தொடக்க நிலை மொபைல் போன் கர்வ் 8520 மற்றும் மூன்று மாடல்கள் விலை குறைக்கப் பட்டுள்ளன. இந்தியாவில், ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் விற்பனையில் இந்த நான்கு மாடல்களும் 60% விற்பனையைக் கொண்டுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது. உலகின் இரண்டாவது பெரிய மொபைல் விற்பனைச் சந்தையில் எங்களின் பங்கினை விட நாங்கள் விரும்பவில்லை; அதற்கான நடவடிக்கையே இது என் ஆர்.ஐ.எம். நிறுவன அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது. உலகின் இரண்டாவது பெரிய மொபைல் விற்பனைச் சந்தையில் எங்களின் பங்கினை விட நாங்கள் விரும்பவில்லை; அதற்கான நடவடிக்கையே இது என் ஆர்.ஐ.எம். நிறுவன அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment