
ஜப்ரா நிறுவனம் ஒரு புதிய ப்ளூடூத் மோனோ ஹெட்செட்டை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய ஹெட்செட்டிற்கு ரெட் ஜப்ரா வேவ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ.3899 ஆகும்.
இந்த புதிய வேவ் ஹெட்செட் எ2டிபி செயல்பாடு கொண்டது. இந்த ஹெட்செட்டை ஸ்மார்ட்போன், மற்றும் ப்ளூடூத் வசதி கொண்ட எம்பி 3 ப்ளேயர் போன்றவற்றில் மிக
எளிதாக இணைக்க முடியும்.
இதை அணிவதும் மிக எளிதாக இருக்கும். காதின் பின்புறம் இதை அணிந்து கொள்ளலாம். மேலும் இதில் வாய்ஸ் கைடன்சும் உள்ளதால் இது காலர் ஐடியைக் காட்டும். ஒரே நேரத்தில் இரண்டு மொபைல்களில் இந்த ஹெட்செட்டை இணைக்க முடியும். இதன் பேட்டரி இந்த ஹெட்செட்டிற்கு 6 மணி நேர இயங்கு நேரத்தையும் 8 நாள்கள் ஓய்வு நேரத்தையும் வழங்குகிறது.
இந்த ஜப்ரா ஹெட்செட் ப்ளூடூத் 3.0, எச்டி வாய்ஸ் தொழில் நுட்பம், ஷாக்கிலிருந்து பாதுகாப்பு, வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சலைத் தடுக்க 3 அடுக்கு தடுப்பு வசதி, போன்றவற்றை கொண்டிருக்கிறது. இதில் மிக சூப்பராக இசையை அனுபவிக்கலாம். இதன் எடை 13 கிராம் மட்டுமே.
0 comments:
Post a Comment