கடந்த (2006 - 11) தி.மு.க., ஆட்சியில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் ஐ.பெரியசாமி. அதே போல அக்கட்சியின் கொறடாவாக இருந்தவர் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ., சக்கரபாணி. 2011 சட்டசபை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று, தற்போதும் எம்.எல்.ஏ., வாக இருக்கிறார், ஐ.பெரியசாமி. அதே போல, சக்கரபாணியும் ஒட்டன்சத்திரம் தொகுதியில்
மீண்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., வாக இருக்கிறார். விஷயம் என்னவென்றால், இவர்கள் இருவரையும் தமிழக அரசின் (www.tn.gov.in) இணையதளம், ""அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,'' என குறிப்பிட்டுள்ளது. இந்த இணையதளத்தில் அரசின் அறிவிப்புகள், துறைவாரியான விவரங்கள், எம்.எல்.ஏ., / எம்.பி., / அமைச்சர்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருக்கின்றன. இதன் மூலம், மக்கள் அரசின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ள முடிகிறது. புதிதாக இந்த வெப்சைட்டை பார்க்கிறவர்கள், ""இந்த இருவரும் கட்சி மாறிட்டாங்களா? சொல்லவே இல்லை'' என கேட்கின்றனர்.

0 comments:
Post a Comment