நுகர் வோருக்கான எலக்ட்ரானிக் பொருட்கள், தகவல் தொழில் நுட்பத்துறைக்கான ஹார்ட்வேர் சாதனங் கள் மற்றும் மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்திய நிறுவனமான இன்டெக்ஸ், அண்மையில் சென்ஸ் என்ற பெயரில், பட்ஜெட் விலையில், 3.2 அங்குல அகலத்திரையுடன், டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.3,690. இதில் இன்டெக்ஸ்
அப்ளிகேஷன் ஸ்டோர், பன்னாட்டளவில் பிரபலமான 42 கேம்ஸ், சில அறிவியல் மற்றும் துப்பறியும் நூல்கள் ஆகியன பதிந்தே தரப்படுகிறது. கூடுதலாக, பயனாளர், இதன் கூடுதல் நினைவகத்தில் 500 நூல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இதன் உள் நினைவகம் 79 எம்.பி. இத்துடன் 4 ஜிபி மைக்ரோ எஸ்.டி. கார்ட் வழங்கப்படுகிறது.
இதன் மற்ற சாதனங்கள் நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றன. ஆடியோ ஈக்குவலைசர், சவுண்ட் ரெகார்டர், டூயல் எல்.இ.டி. டார்ச் லைட், இரண்டு கேமரா, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக தளங்களுக்கான ஷார்ட் கட், ஸ்கெட்ச் நோட் எனப் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து 4.5 மணி நேரம் பேசும் வசதியும், மின் சக்தியை 380 மணி நேரம் தக்க வைத்திடும் வசதியும் கிடைக்கும் வகையில் இதன் பேட்டரி திறன் அமைந்துள்ளது.
இதன் அதிக பட்ச விலை ரூ.3,690. இன்டெக்ஸ் நிறுவனத்தின் தனி விற்பனை நிலையங்கள் மற்றும் மொபைல் விற்பனை நிலையங்களில் இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.
வாடிக்கையாளர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்பினையும் அடிப்படையாகக் கொண்டு தாங்கள் மொபைல் போன் களை வடிவமைப்பதாகவும், அந்த வகையில் ஒவ்வொரு போனிலும் கூடுதல் வசதிகளைத் தந்து வருவதாகவும், இன்டெக்ஸ் நிறுவன பொது மேலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment