உலகிலேயே முதன்முறையாக காருக்கு வெளியில் பாதசாரிகளை காக்கும் வகையிலான புதிய ஏர்பேக்கை வால்வோ அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வி40 பிரிமியம் கார் இந்த புதிய ஏர்பேக் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.
ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக திகழ்கிறது. உலகிலேயே அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் என்ற பெருமையும் வால்வோ கார்களுக்கு உண்டு. இதை பரைசாற்றும் வகையில் புதிய ஏர்பேக் தொழில்நுட்பத்தை வால்வோ அறிமுகம் செய்திருக்கிறது.
பொதுவாக, பயணிகளை காப்பாற்றும் வகையில் காருக்குள் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், முதன்முறையாக காருக்கு வெளியில் செயல்படும் வகையில், இந்த ஏர்பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிரில் வரும் பாதசாரிகள் மீது கார் மோதினாலும், காரின் பேனட்டிலிருந்து வெளிவரும் இந்த ஏர்பேக் பாதசாரிகளை பாதுகாக்கும் என்று வால்வோ தெரிவிக்கிறது. குறிப்பாக, தலையில் காயம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த ஏர்பேக்கை அறிமுகம் செய்துள்ளதாக வால்வோ கூறுகிறது.
ஜெனிவாவில் நடந்து வரும் சர்வதேச மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வி40 பிரிமியம் ஹேட்ச்பேக் காரில் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட ஏர்பேக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்ய வால்வோ திட்டமிட்டுள்ளதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

0 comments:
Post a Comment