சோனி நிறுவனத்தின் வாக்மேன் மொபைல் போன்கள் அதன் வாக்மேன் வசதிக்காகப் புகழ் பெற்றவை. அதற்கெனவே பல வாடிக்கையாளர்கள் அதனை விரும்பி வாங்குவார்கள். சென்ற ஆண்டின் இறுதியில் வெளியான, சோனி எரிக்சன் லைவ் வித் வாக்மேன் அந்த வகையைச் சேர்ந்த மொபைலாக மக்களிடையே இடம் பெற்று வருகிறது. 115 கிராம் எடையில், 106x56.5x14.2 மிமீ என்ற பரிமாணத்தில், 3ஜி பார் டைப் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 3.2 அங்குலத்தில் கெபாசிடிவ்
தொடுதிரையாக எல்.சி.டி. தொழில் நுட்பத்தில் அமைந்துள்ளது. 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்.பி. கேமரா பின்பக்கமும், வீடியோ அழைப்பிற்கான 0.3 எம்.பி. கேமரா முன்பக்கமும் உள்ளன.
இதன் ஸ்டோரேஜ் 320 எம்.பி., நினைவகம் 512 எம்.பி., 32 ஜிபி மெமரி வரை அதிகப்படுத்தும் திறனுக்கான மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இ-மெயில், புஷ் மெயில் ஆகிய வசதிகளும் இதில் உண்டு. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத் ஆகியவை கிடைக் கின்றன. 3ஜி நெட்வொர்க் மற்றும் ஜி.பி.எஸ். இயக்கத்திற்கு 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் உதவிடுகிறது. டச் மற்றும் அக்ஸிலரேட்டர் சென்சார்கள் இயங்குகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ.14,650.

0 comments:
Post a Comment