பல மின்னணு சாதனங்கள் வெளியிடப்பட்டாலும் அதில் சில சாதனங்கள் மட்டுமே எப்பொழுது வெளியாகும் என்றஎதிர் பார்ப்பினை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றன. அந்த வகையில் ஆசஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தினை அதிகம் தூண்டி இருக்கிறது என்றே சொல்லலாம். இஇஇ பேட் டிரான்ஸ்ஃபார்மர் பிரைம் என்ற புதிய டேப்லட்டை ஆசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த டேப்லட் 4 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இஇஇ பேட் டேப்லட் குவாட் கோர் சிபியூ கொண்டு, ஆன்ட்ராய்டு 3.2 ஹனிகோம்பு இயங்குதளத்தில் இயங்கும். 10.1 இஞ்ச் பேக்லைட் டபிள்யூஎக்ஸ்ஜிஏ சூப்பர் ஐபிஎஸ் திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இதனால் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.
இந்த டேப்லட் 8 மெகா பிக்ஸல் கேமராவையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவையும் வழங்கும். 64 ஜிபி வேரியன்ட் வசதியினை கொடுக்கும் இந்த இஇஇ பேட் டிரான்ஸ்ஃபார்மர் பிரைம் டேப்லட் ரூ.49,999 விலையில் கிடைக்கும்.

0 comments:
Post a Comment