இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நோக்கியா லூமியா 710 மொபைல், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. வருவதற்கு முன்னர், உத்தேச விலையாக ரூ.19,000 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது இதன் அதிக பட்ச விலை ரூ. 15,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் போன் வரிசையில் இரண்டாவது போனாகும். இதன் திரை 3.7 அங்குல அகலம் உடையது. திரைக்கென கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 480X800 பிக்ஸெல் திறன் கொண்டது. இதன் பின்பக்க மூடியை கருப்பு அல்லது வெள்ளை என விரும்பும் வண்ணத்தில்
மாற்றிக் கொள்ளலாம். இதன் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் தன்மை உடையது. இந்த பார் வடிவ போனில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்தலாம். 5 மெகா பிக்ஸெல் திறனுடன், டிஜிட்டல் ஸூம் வசதியுடன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போனின் நினைவகம் 512 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில், புஷ் மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர், 3ஜி, வை-பி, புளுடூத், அக்ஸிலரோமீட்டர் மற்றும் டச் சென்சார் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்கு கின்றன. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதன் சிறப்பு என நோக்கியா கருதுகிறது. டாகுமெண்ட் எடிட்டர் மற்றும் வியூவர், வீடியோ மற்றும் போட்டோ எடிட்டர், வாய்ஸ் மெமோ, வாய்ஸ் டயலிங் ஆகிய வசதிகளும் உள்ளன. 1300 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரி, 400 மணி நேரம் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. தொடர்ந்து 7 மணி நேரம் பேசும் திறன் தருகிறது. இதன் பரிமாணம் 119 x 62.4 x 12.5 மிமீ. எடை 125.5 கிராம்.

0 comments:
Post a Comment