இரண்டு சிம் இயக்க போன்களை வழங்கி பெயர் பெற்ற ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் ஸ்பைஸ் எம் 5115 என்ற புதிய மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,300 மட்டுமே. இதன் எடை 44.7 கிராம். 1000 mAH திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 மணி நேரம் பேசலாம். சார்ஜ் செய்யப்பட்ட சக்தி 500 மணி வரை நீடிக்கிறது. இரண்டு அலைவரிசைகளில் இயங்குகிறது. வி.ஜி.ஏ. கேமரா 0.3 மெகா பிக்ஸெல் திறனுடன் உள்ளது. இதில் டிஜிட்டல்
ஸூம் வசதி கிடைக்கிறது. இந்த போனில் மெமரி இல்லை. ஆனால், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை மெமரி கிடைக்கும். இதில் வீடியோ இயக்கலாம். எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. A2DP இணைந்த புளுடூத் உள்ளது. குறைந்த விலையில் பல அம்சங்களுடன் இரண்டு சிம் போனாக இது கிடைப்ப தனால், பட்ஜெட் போன் வாங்க விரும்புபவர்கள் இதனை நாடலாம்.

0 comments:
Post a Comment