மின்னணு சாதன உலகில் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து நன் மதிப்பை பெற்றிருக்கும் ஏசர் நிறுவனம் நிறைய மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் கொடுத்திருக்கிறது. ஏசர் பி டச் இ-210 ஸ்மார்ட்போனில் உள்ளசில தொழில் நுட்ப வசதிகள் பற்றி பார்ப்போம்.
இந்த ஏசர் பி டச் இ-210 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி.2.2 ஃப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த ஓஎஸ் சிறப்பாக இயங்க இதில் 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கியூவல்காம்எம்எஸ்எம்7227 பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் சிறந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களை பெற 2.6 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை வசதியும் உள்ளது. இந்த திரை 320 X 240 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும். தெளிவான புகைப்படத்தை நிச்சயம் இதன் 3.15 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் பெறலாம். வீடியோ ரெக்கார்டிங் வசதிக்கும் இந்த கேமரா சப்போர்ட் செய்யும்.
ஆற்றல் வாய்ந்த 1,300 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமிற்கும் சப்போர்ட் செய்யும்.வாங்கும் எண்ணத்தை தூண்டும் இந்த ஏசர் பி டச் இ-210 ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதியினை கொண்டது. சிறந்த தொழில் நுட்ப வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,000 ஓட்டிய விலையில் பெறலாம்.

0 comments:
Post a Comment