வடிவமைப்பிலும், தொழில் நுட்பத்திலும் பலரது மனதில் இடம் பிடித்துள்ளது நோக்கியா நிறுவனம். 5330 எக்ஸ்பிரஸ் மியூசிக் என்ற ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.4 இஞ்ச் டிஎப்டி திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இந்த திரையினால் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியமும் கிடைக்கும். இது நோக்கியாவின் சொந்த ஓஎஸ் கொண்டு இயங்கும்.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்லைஸ்டு டாப் வடிவமைப்பை கொண்டது. இதன் தோற்றம் பார்ப்பவர்களை எளிதில் ஈர்த்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3.15 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த புகைப்படத்திற்கும், வீடியோ காலிங் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.
இதன் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1,000 எம்ஏஎச் பேட்டரி 7 மணி நேரம் 42 நிமிடம் டாக் டைம் வசதிக்கும், 26 மணி நேரம் ப்ளே பேக் டைமிற்கும் சப்போர்ட் செய்கிறது. இதில் 350 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறலாம். சிறந்த தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த நோக்கியா 5330 மியூசிக் எக்ஸ்பிரஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.10,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

0 comments:
Post a Comment