ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை மட்டும் கொடுத்து கொண்டு இருக்காமல், ஆன்ட்ராய்டு இல்லாத சிறந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைலை கொடுப்பதிலும் சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறது மோட்டோ நிறுவனம். ஏற்கனவே புதிய மொபைலை வெளியிடுவதாக அறிவித்து இருந்தது மோட்டோரோலா
நிறுவனம்.
நிறுவனம்.
ஐ-412 என்று மொபைலை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா. இது சூப்பர் அமோல்டு தொடுதிரை வசதியை கொண்டது. 1.79 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைல் டிஎப்டி கலர் டிஸ்ப்ளேவையும் வழங்கும்.
எந்த ஒரு இனிய தருணமாக இருப்பினும், அந்த அழகிய தருணத்தை மொபைலில் உள்ள கேமராவின் மூலம் மனதில் நிறுத்த முடிகிறது. இதில் விஜிஏ கேமரா வசதி உள்ளது. இந்த மொபைலில் அடிப்படை வசதி கொண்ட தொழில் நுட்பங்களை பெறலாம்.
இந்த மொபைலில் முக்கியமாக கூற வேண்டியது இதன் பேட்டரி வசதி. உயர்ந்த வகை பேட்டரி இந்த ஐ-412 மோட்டோராலா மொபைலில் கிடைக்கும். 1130 எம்ஏஎச் எல்ஐ அயான் பேட்டரியை வழங்கும். ஆனால் இந்த மொபைலை பற்றிய விலை இன்னும் வெளியிடப்படவில்லை. கவர்ச்சிகரமான விலையில் இந்த மொபைல் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment