நிறைய டியூவல் சிம் தொழில் நுட்ப வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனை கொடுத்து இருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்போது புதிய எக்ஸ்-650 மொபைலை வெளியிட்டுள்ளது. இது டியூவல் சிம் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் மொபைல்.
எந்த தகவல்களையும் எளிதாக பார்க்க உதவுவது மொபைலின் திரை தான். இந்த மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-650 மொபைலில் சிறந்த திரை வசதி உள்ளதால் தகவல்களை தெளிவாக காணலாம்.
இது 3.2 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டது. இதனால் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தை வழங்கும்.8 ஜிபி வரை மெமரி கார்டு வசதிக்கு இந்த மொபைல் சப்போர்ட் செய்யும். புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகளை வழங்கும் இந்த மொபைல் 1080 எம்ஏஎச் பேட்டரியை கொண்டது. இதனால் அற்புதமான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியினை பெறலாம். டியூவல் சிம் வசதி கொண்ட இந்த மொபைலின் விலை மிக விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment