
பள பளக்கும் தோற்றம் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது சோனி எரிக்சன். லைவ் என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது சோனி எரிக்ஸன் நிறுவனம். இது வாக்மேன் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.
இது ஆன்ட்ராய்டு வி2.3 இயங்குதளம் கொண்டது. சோனி எரிக்சன் லைவ் ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்னாப்டிராகன் ஸ்கார்பியன் பிராசஸரை கொண்டிருக்கிறது. இதன் 3.2 இஞ்ச் திரை டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பத்தினை கொண்டது. இந்த திரை 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் என்பதால், எந்த காட்சிகளையும் சிறப்பாக பார்க்க முடியும்.
ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் ஃபிளாஷ் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த லைவ் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், செகன்டரி கேமராவும் உள்ளது. இதனால் 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியை பெற முடியும். 2ஜி, 3ஜி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 1,200 எம்ஏஎச் பேட்டரி வசதியை பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்-லைன் மார்கெட்டில் அதிக வரவேற்பை பெற்றள்ளது. இதனால் சோனி எரிக்சன் நிறுவனம் நிறைய வசதிகளை இந்த லைவ் ஸ்மார்ட்போனில் இணைத்து வெளியிட உள்ளது. இந்த சோனி எரிக்சன் லைவ் ஸ்மார்ட்போன் ரூ-15,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.
0 comments:
Post a Comment